தேனி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத்தை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் தமிழ்நாடு முஸ்லிம் லீக் புகார் அளித்துள்ளது.
தேனி குச்சனூர் பகுதியிலுள்ள காசி ஶ்ரீ அன்னபூரணி கோயிலில், தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் பெயரை தேனி மக்களவை உறுப்பினர் எனக் குறிப்பிட்டு கல்வெட்டு வைக்கப்பட்டது. இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி கடும் எதிர்ப்பு எழுந்தது. இதுதொடர்பாக அறிக்கைவிட்ட ரவீந்திரநாத், “கல்வெட்டி நிகழ்ச்சி தவறானது. எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார். ரவீந்திரநாத் அளித்த புகாரின் பேரில், கல்வெட்டு வைத்த கோயில் நிர்வாகி வேல்முருகனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில் கல்வெட்டு விவகாரம் தொடர்பாக ரவீந்திரநாத்தை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா நேற்று (மே 18) புகார் மனு அளித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கல்வெட்டில் தேனி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் பெயர் எம்.பி எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், தேர்தல் ஆணையம் ஒரு கண்ணில் வெண்ணெயையும் ஒரு கண்ணில் சுண்ணாம்பையும் வைத்துப் பார்க்கிறது.
கல்வெட்டை மறைத்துவிட்டார்கள் என்று தேர்தல் அதிகாரி கூறுகிறார். இருப்பினும் தேர்தல் விதிகளுக்கு மாறாகச் செயல்பட்ட அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவருடைய தந்தை துணை முதல்வராக இருப்பதால்தான் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதுதொடர்பாக புகார் அளித்துள்ளோம். நடவடிக்கை எடுப்பதாக அதிகாரி உறுதியளித்துள்ளார்” என்று தெரிவித்தார்.
சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “நாட்டில் தேர்தல், வாக்குப் பதிவு, வாக்கு எண்ணிக்கை இல்லாமல் நாங்கள் வெற்றிபெற்று விட்டோம் என்று கூறுகிறார்கள் என்றால், வாக்கு எண்ணிக்கையில் கூட அவர்கள் ஏதாவது செய்வார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. இதெல்லாம் பார்த்து தேர்தல் ஆணையம் ஏன் மவுனமாக இருக்கிறது எனத் தெரியவில்லை. எப்படி எம்.பி என்று அவர்கள் கல்வெட்டில் போடுவார்கள். இது ஒன்றுபோதுமே ரவீந்திரநாத்தை தகுதி நீக்கம் செய்ய…” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், வேண்டும் என்று கேட்கிற பொன்பரப்பிக்கு மறுவாக்குப்பதிவு நடத்தவில்லை. யாருமே கேட்காத இடத்தில் வைக்கிறார்கள். தேர்தலையே ஒரு மோசடி தேர்தலாக ஆக்கிவிடுவார்களோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
.
.
**
மேலும் படிக்க
**
.
**
[ஸ்பெயின் ரசிகர்களைக் கவர்ந்த தனுஷ்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/53)
**
.
**
[டிஜிட்டல் திண்ணை: கமலின் நாக்கு- அமைச்சரை பாராட்டிய முதல்வர்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/88)
**
.
**
[விமர்சனம்: மிஸ்டர் லோக்கல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/7)
**
.
**
[மோடி காய்ச்சல்: சந்திரபாபு நாயுடு பரபரப்பு!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/52)
**
.
**
[தினகரனுக்கு எடப்பாடி சொன்ன செய்தி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/27)
**
.
.
�,”