மத்திய நிதியமைச்சராக உள்ள அருண் ஜேட்லி உடல்நலக் குறைவுடன் இருப்பதால், அவர் நிதியமைச்சராகத் தொடருவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
17ஆவது மக்களவையைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சியமைக்கத் தயாராகியுள்ளது. தொடர்ந்து இரண்டாவது முறையாக மோடி ஆட்சிப் பொறுப்பை ஏற்கிறார். இந்நிலையில் கடந்த மோடி அரசின் முக்கிய அமைச்சரவை உறுப்பினரும், மத்திய நிதியமைச்சருமான அருண் ஜேட்லி புதிய அரசின் நிதியமைச்சராகத் தொடரமாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அவர் ஓய்வெடுக்கும் பட்சத்தில் புதிய நிதியமைச்சராக பியூஸ் கோயல் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்துப் பெயர் குறிப்பிட விரும்பாத அரசு அதிகாரி ஒருவர் *ராய்ட்டர்ஸ்* செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “அருண் ஜேட்லியின் உடல் நிலை முழுத் தகுதியோடு இல்லாததால் அவர் கண்டிப்பாக நிதியமைச்சராகத் தொடரமாட்டார். மாறாக, ஏதேனும் அழுத்தம் குறைவான பதவி அவருக்கு வழங்கப்படலாம்” என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அருண் ஜேட்லி தரப்பிலிருந்தோ அவரது அலுவலகத்திடமிருந்தோ எந்தவிதத் தகவலும் வெளியிடப்படவில்லை.
ஜிஎஸ்டி, வங்கி திவால் சட்டம், ரியல் எஸ்டேட் சட்டம் உள்ளிட்ட முக்கிய சீர்திருத்தங்களைத் தனது பதவிக் காலத்தில் அருண் ஜேட்லி மேற்கொண்டது நினைவுகூரத்தக்கது.
.
.
**
மேலும் படிக்க
**
.
.
**
[பன்னீர்செல்வம் மீண்டும் முதல்வராவார்: தங்க தமிழ்ச்செல்வன்](https://minnambalam.com/k/2019/05/24/58)
**
.
**
[திமுக மக்களவைக் குழுத் தலைவர் யார்?](https://minnambalam.com/k/2019/05/24/63)
**
.
. **
[ராஜ்யசபா: அன்புமணியின் அடுத்த மூவ்!](https://minnambalam.com/k/2019/05/24/9)
**
.
**
[திமுக எம்.பி.க்களின் ரகசிய புலம்பல்!](https://minnambalam.com/k/2019/05/24/30)
**
.
**
[அமேதியில் ராகுல் வீழ்ந்த பின்னணி!](https://minnambalam.com/k/2019/05/24/33)
**
.
.�,”