பண மதிப்பழிப்பு: 15 லட்சம் தினக்கூலிகள் வேலையிழப்பு!

Published On:

| By Balaji

பிரதமர் நரேந்திர மோடி கடந்த நவம்பர் மாதம் பண மதிப்பழிப்பு நடவடிக்கையை அமல்படுத்தினார். இதனால் கருப்புப்பணம் குறையும் என்று கூறப்பட்ட நிலையில் சாதாரண பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறையும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உட்படப் பலர் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், பண மதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொண்ட 3 மாதங்களில் சுமார் 15 லட்சம் தினக்கூலிகள் தங்களின் வேலையை இழந்துள்ளதாக ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

தொழிலாளர் அமைச்சகத்தின் ஒரு பிரிவான தொழிலாளர் பணியகம், குறிப்பிட்ட 3 துறைகளின் வேலைச் சூழல் குறித்த காலாண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் முழுநேர ஊழியர்களின் எண்ணிக்கை 1.68 லட்சம் அதிகரித்துள்ளது. அதேவேளையில் பகுதிநேர ஊழியர்களின் எண்ணிக்கையில் 46 ஆயிரம் குறைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக 1.22 லட்சம் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவர்களில் பெண்கள் 52 ஆயிரம் பேர், ஆண்கள் 70 ஆயிரம் பேர். அதேவேளையில், தினசரி கூலிகளின் எண்ணிக்கை பெரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. ஐ.டி., போக்குவரத்து, உற்பத்தி உட்பட 8 துறைகளில் சுமார் 1.52 லட்சம் தினக்கூலிகள் வேலை வாய்ப்பை இழந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுமானத்துறையில் பெரிய அளவு வேலைவாய்ப்பு வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share