பணிநீக்கம்: திறனை மேம்படுத்தும் ஐ.டி. ஊழியர்கள்!

Published On:

| By Balaji

சமீப காலமாகவே தானியங்கிமயத்தாலும், தொழில்நுட்ப வளர்ச்சியாலும் தகவல் தொழில்நுட்பத் துறையில் பெரும்பாலான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். மேலும், பலருக்கு ஊதிய உயர்வு வழங்கப்படாமலும் உள்ளது. அமெரிக்க விசா கொள்கைகளாலும் இத்துறையில் கடினமான சூழல் நிலவி வருகிறது. இதனால் ஐ.டி. ஊழியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

எனவே, இந்த ஆண்டில் அதிகளவிலான ஐ.டி. ஊழியர்கள் செயற்கை நுண்ணறிவு, டேட்டா சயின்ஸ், மெஷின் லேர்னிங், பிசினஸ் டேட்டா அனலிட்டிக்ஸ் உள்ளிட்ட திறன்களுக்கு தங்களை மேம்படுத்தியுள்ளனர். ஐ.டி.ஐ.டி.இ.எஸ். துறையில்கூட ஊழியர்கள் தங்களது திறனை மேம்படுத்துவதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். McKinsey & Company ஆய்வு நிறுவன அறிக்கையின்படி, ஐ.டி. ஊழியர்கள் தங்களது திறனை மேம்படுத்திக் கொள்ளாவிட்டால் இன்னும் மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் அவர்களது நிலைமை கேள்விக்குறியாகிவிடும் என்று தெரிவித்துள்ளது.

இதுபற்றி ‘கிரேட் லேர்னிங்’ என்ற தகவல் தொழில்நுட்பப் பயிற்சி நிறுவன இணை நிறுவனரான ஹரி கிருஷ்ணா கூறுகையில், “எங்களது நிறுவனம் ஐ.டி. ஊழியர்களின் திறன்களைப் புதுப்பிக்கவும், திறனை மேம்படுத்தவும் உதவுகிறது. இதில் 5 முதல் 10 வருடங்கள் அனுபவமுள்ள ஊழியர்களும் பங்கேற்கின்றனர். அக்கெஞ்சர், கேப்ஜெமினி, Mu சிக்மா, வெல் ஃபார்கோ மற்றும் சி.டி.எஸ். உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்கள் பலர் இங்கு தங்களது திறனை மேம்படுத்திக் கொள்கின்றனர்” என்றார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel