பட்ஜெட் திட்டங்களுடன் களமிறங்கும் நெட்ஃப்ளிக்ஸ்!

Published On:

| By Balaji

இந்தியாவில் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் தனது தொழிலை விரிவுபடுத்த திட்டமிட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அடுத்த காலாண்டில் குறைந்த கட்டணத்திலான பட்ஜெட் திட்டங்களை அறிமுகப்படுத்த நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்தத் தகவலை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்திய சந்தையில் சராசரியாக ஒரு வாடிக்கையாளரிடமிருந்து ஐந்து டாலருக்கும் குறைவான வருவாயே கிடைக்கிறது. ஆகையால், கூடுதல் சந்தாதாரர்களை நெட்ஃப்ளிக்ஸுக்கு அறிமுகப்படுத்துவதற்காக பட்ஜெட் திட்டங்களை கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. பட்ஜெட் திட்டங்களின் கட்டணங்கள் என்ன, மாதாந்திர சந்தாவா, வாராந்திர சந்தாவா என்பது தொடர்பான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

இந்தியா மட்டுமல்லாமல் மலேசியா போன்ற இதர ஆசிய சந்தைகளிலும் பட்ஜெட் திட்டங்களை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் சோதனை செய்து வருகிறது. மேலும், மொபைல் போன்களில் நெட்ஃப்ளிக்ஸ் பயன்படுத்துவோருக்கு மட்டும் வாராந்திர திட்டங்களை இந்தாண்டில் நெட்ஃப்ளிக்ஸ் அறிமுகப்படுத்தியது. குறிப்பிட்ட சில பயனாளிகளுக்கு மட்டும் ரூ.65 கட்டணத்தில் இந்த திட்டத்தை நெட்ஃப்ளிக்ஸ் சோதனை செய்தது.

அனைவருக்கும் குறைந்த கட்டணத்திலான பட்ஜெட் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு அவை மட்டும் கடைப்பிடிக்கப்படுமா அல்லது வேறு புதிய திட்டங்களும் அறிமுகப்படுத்தப்படுமா என்பது தெளிவுபடுத்தப்படவில்லை. பட்ஜெட் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு கூடுதல் விவரங்களை வெளியிடுவோம் என்று நெட்ஃப்ளிக்ஸ் தனது பங்குதாரர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் முதல் ஐந்து மெட்ரோ நகரங்களில் அதிகம் பயன்படுத்தப்படும் ஸ்ட்ரீமிங் தளங்களில் நெட்ஃப்ளிக்ஸும் ஒன்று என கவுண்ட்டர்பாய்ண்ட் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. எனினும், இதர போட்டி நிறுவனங்களான ஹாட்ஸ்டார், அமேசான் ப்ரைம், சோனி லைவ், வூட், ஜீ5 ஆகிய தளங்கள் குறைந்த கட்டணத்தில் சேவை வழங்குவதால் நெட்ஃப்ளிக்ஸ் கடும் போட்டியை சந்தித்து வருகிறது. அதிலும், வூட் போன்ற தளங்கள் இலவசமாகவே சேவையை வழங்குகின்றன.

**

மேலும் படிக்க

**

**[ அடிக்கப் பாய்ந்த சத்யா – அடக்கிய சேகர்பாபு: சட்டமன்ற காட்சிகள்!](https://minnambalam.com/k/2019/07/18/25)**

**[அத்திவரதர்: வரிச்சியூர் செல்வத்துக்கு பாஸ் கொடுத்தது யார்?](https://minnambalam.com/k/2019/07/18/54)**

**[30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/07/16/18)**

**[மணிரத்னம் – நயன்: உருவாகும் வித்தியாசமான கூட்டணி!](https://minnambalam.com/k/2019/07/17/20)**

**[டிஜிட்டல் திண்ணை: கிராம சபைகளைக் குறிவைக்கும் சூர்யா](https://minnambalam.com/k/2019/07/17/80)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share