சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்டோரின் நடிப்பில் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ரோஜாக்கூட்டம், பூ ஆகிய படங்களை இயக்கிய சசி இப்படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு பணிகளை ஜி.வி.பிரகாஷ் முடித்துக்கொண்டதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இயக்குநர் சசியின் சிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் படப்பிடிப்பு பணிகளை முடித்துக்கொண்டேன். சசியுடனும், நடிகர் சித்தார்த்துடனும் இணைந்து பணிபுரிந்தது ஓர் அழகிய பயணம். சிவப்பு மஞ்சள் பச்சை ஓர் அருமையான கதை” என்று தெரிவித்துள்ளார்.
சித்தார்த் நடித்த உதயம் என்.ஹெச் 4 படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். அதன்பின் இருவரும் முதல்முறையாக சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் ஒன்றாக நடிக்கின்றனர். மேலும், ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்த வாட்ச்மேன் திரைப்படம் ஏப்ரல் 12ஆம் தேதியன்று வெளியாகவுள்ளது. இப்படத்தில் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
நடன இயக்குநர் பாபா பாஸ்கர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள குப்பத்து ராஜா படமும் சென்சார் பணிகளை முடித்து ‘யு/ஏ’ சான்றிதழ் பெற்றுள்ளது. இப்படத்தில் பாலக் லால்வாணி, பூணம் பாஜ்வா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். நடிகர் பார்த்திபன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படம் ஏப்ரல் 5ஆம் தேதியன்று வெளியாகவுள்ளது.�,