என்னப்பா அத்தனை கருத்துகணிப்புகளும் அவங்களுக்கு சாதகமா வந்துருக்கே.. அதுவும் வித்தியாசம் எல்லாம் பயங்கரமா இருக்கு. இது தெரியாம நீங்க அவரை கலாய்ச்சு மீம்ஸ் போட்டுகிட்டு இருக்கீங்களேன்னு ஒரு மீம் கிரியேட்டர் தம்பிகிட்ட கேட்டேன். அதுக்கு அவர், “பச்சக்கிளிக்கு பேண்டு வாங்கி தரவும், தொப்பி வாங்கித் தரவும், புல்லட் வாங்கித் தரவும்னு வடிவேலு மாதிரி எதையோ சொல்லிகிட்டு இருக்காங்க. இன்னும் மூணு நாளுல ரிப்போர்ட்டை மாத்தி படிச்சாகனும்”னு சொல்றாரு. அஞ்சு வருசமா எத்தனை மீம்ஸ்களுக்கு கண்டண்ட் கொடுத்த மனுசனை இவ்வளவு லேசா எடுத்துக்க இந்த மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு எப்படி மனசு வந்துச்சோ.
எக்ஸிட் போல் ரிசல்ட்டை காண்பிச்சு ஆட்சி அமைக்க கோரமுடியுமான்னு அவங்க கட்சிக்காரர் ஒருத்தர் இன்பாக்ஸுல கேள்வி கேட்ருக்காரு. நீங்க அப்டேட்டை பாருங்க. அவருக்கு ரெண்டு மீம்ஸை பதிலா அனுப்பிட்டு வந்துடுறேன்.
**@Thaadikkaran**
டாக்டர்.. டாக்டர்..மத்த நாளெல்லாம் லேட்டா எந்திரிக்க தோணுது ஆனா இந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் சீக்கிரம் எந்திருச்சிடுறேன் இதுக்கு ஏதாவது மருந்து இருந்தா கொடுத்து காப்பாத்துங்க டாக்டர்..!
**@smhrkalifa**
இதுவரை ட்ரீம்11 கேமில் முதல் பரிசு வென்றவர்கள்,
இதுவரை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் வாக்களித்தவர்கள்..
இந்த இரண்டு சாராரை இதுவரை யாராவது பார்த்திருக்கிறீர்களா?
**@nelsonvijay08**
கடந்த 25 ஆண்டுகால எல்லா எக்ஸிட் போல்களிலும் பாஜக மட்டும்தான் தனிப்பெருங்கட்சியாக இருந்து வருகிறது என்பது சாதனைக்குரிய விசயம்
**@கருப்பு கருணா**
கூட்டணி கட்சி தலைவர்களுக்கு பாஜக அழைப்பு-
விருந்து அளிக்கிறார் அமித்ஷா
தேர்தல் ஆணையத்துக்குக்காரங்களையும் தொலைக்காட்சி அதிபர்களையும் மறக்காம கூப்புட்டுக்குங்கப்பா..!
**@sultan_Twitz**
அம்மா பேரவை இணை செயலாளர் பதவியிலிருந்து எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலம் ராஜினாமா – செய்தி #
எஃகு கோட்டையில இருந்து இன்னும் எத்தனை செங்கல் உருவப்போவுதோ..?
**@Thaadikkaran**
அனைவரும் விரும்பிச் செல்லும் சிறைச்சாலை திருமணம்…!
கோடை விடுமுறையில் மட்டுமே ஜாமீன் கிடைக்கும்..!
**@SubashiniBA**
23தேதி மத்தியில் யார் ஆட்சியை பிடிப்பார் என்பதை தீர்மானம் செய்யும் நாள் இல்ல..!
இந்தியா சுடுகாடா இல்லையா என்பதை தீர்மானம் செய்யும் நாள்..!
**@Kozhiyaar**
Warranty காலம் முடிந்த ஒரு மாதத்திற்குள் பிரச்சனை ஆரம்பித்து விடும் என்பது தான் Warranty-ன் சிறப்பு!!
**@pachaiperumal23**
ஆயிரம் பேரைக்கூட எதிர்த்து நில்.
ஆனால் ஒருத்தரைக்கூட எதிர்பார்த்து நிற்காதே.
**@mohanramko**
ஏசியை ஃபுல்லா வச்சிட்டு, போர்த்திகிட்டு மெத்தையிலயே உட்கார்ந்து தூங்கிட்டு இருக்கிறான், பையன்…
கேட்டா தியானம் பண்றானாம்…
**@mohanramko**
மத்திய அரசு கோடு போட்டா, மாநில அரசு ரோடு போடுவதுதான் எட்டு வழிச்சாலை
**@Suyanalavaathi**
நாம ஒரு பொருளை காணவில்லை என்று செல்ப்பில் தேடினால் தேடும் பொருளை தவிர வேறு காணாமல் போன பொருள் கையில் கடைக்கும் , இது இங்கு தான் இருக்கா என்ற ஆச்சரியத்துடன் !!
**@Annaiinpillai**
வாழைப்பழத்தை பார்த்தால் செந்திலும், மீம்ஸை பார்த்தால் வடிவேலும் நியாபகம் வருவது நமக்குள் தவிர்க்க முடியாத டிசைன்!
**@mohanramko**
உலகக்கோப்பையை வெல்ல ஆஸ்திரேலியாவுக்கு வாய்ப்பு : முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் கணிப்பு
காம்பீரோட ‘exit’ poll இது
**@Kozhiyaar**
இங்கே அனுபவங்கள் அறிவுரை கூற மட்டுமே பயன்படுகின்றன!!!
**@HAJAMYDEENNKS**
ஓட்டு போட்டவங்க உண்மையை சொல்வாங்கன்னு நம்புறதும் மூடநம்பிக்கைதான் !
**@shivaas_twitz**
மனைவி: ஏங்க… ‘ஆதிக்கவாதிகளும் வேண்டாம், அடிமைகளும் வேண்டாம்’னு சொல்றாங்களே… யாரை சொல்றாங்க?
கணவன்: ம்… உன்னையும் என்னையும் தான்…!
**@manipmp**
கைப்பேசி சும்மா இருந்தாலும்
கட்டைவிரல் சும்மா இருக்கவிடுவதில்லை
**@mohanramko**
உட்கார இருக்கை போடாமல், கால் வலிக்க நிற்க வைத்து, சீக்கிரமே ஏதாவது ஒரு டிரஸ்ஸை செலக்ட் பண்ண வைப்பது துணிக்கடைக்காரர்களின் வியாபார தந்திரம்
**@shivaas_twitz**
இன்னைக்கு வீட்டம்மா யூ டியூப் பார்த்து ஒரு சமையல் ஐட்டம் செஞ்சாங்க
சாப்பிட்டு முடிச்ச பின், அந்த வீடியோவை பார்த்தேன்
சுமார் 13 ஆயிரம் பேர் அதை பார்த்துருக்காங்க
நீதி: துன்பங்கள் நமக்கு மட்டுமே வருவதில்லை
-லாக் ஆஃப்
.
.
**
மேலும் படிக்க
**
.
**
[சோனியா திடீர் உற்சாகம்: காரணம் என்ன?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/16)
**
.
**
[வாக்குக் கணிப்பும் மக்கள் முடிவும்: தேர்தல் வரலாறு சொல்வது என்ன?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/18)
**
.
**
[தமிழகம்: திமுக கூட்டணிக்கே சாதகம்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/20)
**
.
**
[அமமுகவின் க்ளைமாக்ஸ் வியூகம்- சமாளித்தாரா செந்தில்பாலாஜி?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/37)
**
.
**
[ஸ்டாலின் –மம்தாவுக்கு இடையே போட்டி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/38)
**
.
.
�,”