பசுவதையில் ஈடுபட்டால் தேசிய பாதுகாப்பு சட்டம்: ஆதித்யநாத்

public

பசுவதையில் ஈடுபடுவோரின் மீது தேசிய பாதுகாப்புச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத் எச்சரித்துள்ளார்.

சந்தைகளில் மாடுகள், பசுக்கள், கன்றுகள் எருமை மாடுகள், ஒட்டகங்கள் போன்றவற்றை விற்கவும், வாங்கவும் கூடாது என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. உச்சநீதிமன்றத்திம் அளித்த பரிந்துரைக்கு இணங்க இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழகம், கேரளா, கர்நாடகா, மேற்குவங்கம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், திரிபுரா, நாகாலாந்து உள்ளிட்ட பல மாநிலங்களில் மத்திய அரசின் உத்தரவுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. பல இடங்களில் போராட்டங்களும் வெடித்தன.

இந்நிலையில் பாஜகவின் ஆட்சி நடக்கும் மாநிலங்களில் பசுவதைக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமடைந்து வருகிறன. உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத் ஜூன் 7-ம் தேதியன்று பேசுகையில், “பசுவை கோமாதாவாக வணங்குவது நம் மண்ணின் மரபு. பசுவை காப்பது சுற்றுச்சூழலுக்கு உகந்தது. வேளாண்மைக்கும் உதவியாக இருக்கும். பசுவதை அறவே கூடாது. பசுவதைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பசுவதையில் ஈடுபடுவோர் மீது தேசிய பாதுகாப்பு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பசுவை ஒழுங்காக பராமரித்தால் நிறைய பலன்களை பெறலாம். ஆகையால், பசுக்களை கொல்லவேண்டிய அவசியம் இருக்காது” என அவர் கூறினார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.