Tதினப் பெட்டகம் – 10 (13.06.2018)
ஆக்ஸிஜன் பற்றிக் கடந்த மாதம் பார்த்தோம். இப்போது ஆக்ஸிஜன் போலவே முக்கியமான மற்றொரு தனிமமான நைட்ரஜன் பற்றிப் பார்க்கலாம்.
1. சாதாரணமான சூழலில் நைட்ரஜன் வாயுவிற்கு நிறம், மணம், சுவை கிடையாது.
2. நாம் சுவாசிக்கும் காற்றில் 78% நைட்ரஜன் உள்ளது.
3. உலகில் உள்ள அனைத்து உயிரிகளின் உடலிலும் நைட்ரஜன் இருக்கிறது. DNAவின் மூலக்கூறு நைட்ரஜன்தான்.
4. சனிக் கோளின் (Saturn) மிகப் பெரிய நிலவான ‘டைட்டான்’ 98% நைட்ரஜனால் ஆனது. நம் சூரியக் குடும்பத்தில் இருக்கும் அடர்த்தியான சூழல் கொண்ட ஒரே நிலவு அதுதான்.
5. பூமியில் 78% நைட்ரஜனும், செவ்வாயில் 2.6% நைட்ரஜனும் இருக்கிறது.
6. நைட்ரஸ் ஆக்ஸைட் சுற்றுப்புறத்தைப் பாதிக்கும் பசுமை இல்ல வாயு. இது கரியமில வாயுவைவிட 300 மடங்கு அதிகம் மாசுபடுத்தக்கூடியது.
7. பிரபஞ்சத்திலேயே அதிகமாகக் கிடைக்கும் தனிமங்களில் ஏழாவது இடத்தில் நைட்ரஜன் இருக்கிறது.
8. நைட்ரஜனை ஐஸ்கட்டி போல உறைந்துபோக வைத்துவிடலாம். உறைந்து போன நைட்ரஜன் பனியைப் போல இருக்கும்.
9. நம் உடலில் 3% நைட்ரஜன் இருக்கிறது.
10. ஸ்டீல் தயாரிப்பில் முக்கியமான பங்கு நைட்ரஜனுக்கு இருக்கிறது.
**- ஆஸிஃபா**�,