நெருங்கும் சட்டமன்றத் தேர்தல்கள்: பிடிகொடுக்காத ராகுல்

Published On:

| By Balaji

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் இன்று (ஜூன் 12) ஏ.கே. அந்தோணி தலைமையில் இன்று டெல்லியில் கூடி ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள்.

கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸின் கட்சியின் தோல்வியை அடுத்து மே 25ஆம் தேதி நடந்த காங்கிரஸ் செயற்குழுவில் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ராகுல் காந்தி தெரிவித்தார். அதற்கு ஒட்டுமொத்த செயற்குழுவும் மறுப்பு தெரிவித்து அவரது பதவி விலகலை நிராகரித்தும் கூட, ராகுல் காந்தி இன்னும் தன் முடிவில் இருந்து மாறுவதாகத் தெரியவில்லை.

இந்நிலையில் ஹரியானா, ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் வர இருக்கிற நிலையில் அதுபற்றிய வியூகங்களை வகுக்க காங்கிரஸ் தயாராக வேண்டும். இதற்காக இன்று டெல்லியில் காங்கிரஸ் அலுவலகத்தில் ஏ.கே. அந்தோணி தலைமையில் அகமது பட்டேல், மல்லிகார்ஜுன கார்கே, ப. சிதம்பரம், குலாம் நபி ஆசாத், கே.சி. வேணுகோபால், சுர்ஜிவாலா, ஜெய்ராம் ரமேஷ், ஆனந்த சர்மா ஆகிய தலைவர்கள் இன்று கூடி ஆலோசனை நடத்தினர்.

இக்கூட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுர்ஜிவாலா, “காங்கிரஸ் கட்சிக்கு நேற்றும், இன்றும், நாளையும் ராகுல் காந்திதான் தலைவர். அதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை” என்று மட்டுமே தெரிவித்தார்.

இதற்கிடையில் உத்திரப்பிரதேச மாநிலத்திலுள்ள மொத்தம் 80 தொகுதிகளில் காங்கிரஸ் சார்பில் தான் ஜெயித்த ஒரே தொகுதியான ரேபரேலிக்கு இன்று சோனியா காந்தி சென்றார். தேர்தல் முடிவுக்குப் பிறகு முதன் முறையாக தொகுதிக்கு சென்ற சோனியா தன்னுடன் பிரியங்கா காந்தியையும் அழைத்துச் சென்றார். ஜூன் 14 ஆம் தேதி உ.பி. தேர்தல் தோல்வி குறித்து சோனியா காந்தி ஆலோசனைக் கூட்டம் ஒன்றையும் நடத்துகிறார். 2022 ஆம் ஆண்டு உ.பி. மாநில சட்டமன்றத் தேர்தல் வர இருக்கும் நிலையில் அதுபற்றியும் இந்த ஆய்வுக் கூட்டத்தில் ஆலோசிக்க இருக்கிறார் சோனியா.

**

மேலும் படிக்க

**

**[பாஜக அழைப்பு: அலைபாயும் ஜி.கே.வாசன்](https://minnambalam.com/k/2019/06/12/20)**

**[சட்டமன்றக் கூட்டம்: எடப்பாடியின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/06/12/25)**

**[டிஜிட்டல் திண்ணை: ஆலோசனைக் கூட்டம்! எடப்பாடி-பன்னீர் க்ளைமேக்ஸ் ஒப்பந்தம்!](https://minnambalam.com/k/2019/06/11/65)**

**[ஒற்றைத் தலைமை பற்றி பேசவில்லை!](https://minnambalam.com/k/2019/06/12/46)**

**[வாரிசுகள் தோல்வியடைந்த வரலாறு](https://minnambalam.com/k/2019/06/12/22)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share