~நெய்வேலி காதலர்கள் மரணம்: திருமாவளவன் கருத்து!

Published On:

| By Balaji

சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்குக் கட்டுப்பாடுகள் கொண்டுவர வேண்டும் என்று மத்திய அரசுக்கு திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

கடலூர் மாவட்டம் நெய்வேலியை அடுத்த குறவன்குப்பத்தைச் சேர்ந்த நீலகண்டன் மகள் ராதிகா குறித்து, அதே ஊரைச் சேர்ந்த பிரேம்குமார் என்பவர் முகநூலில் ஆபாசமாகப் பதிவிட்டு செய்தி அனுப்பியுள்ளார். இதனால் மனமுடைந்த ராதிகா தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தச் செய்தி அறிந்து ராதிகாவைத் திருமணம் செய்துகொள்ள இருந்த விக்னேஷும் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறுகிறார்கள். இருவரது மரணத்துக்கும் காரணமாக இருந்தவர்களை கைது செய்யக் கோரி அவர்களின் உறவினர்கள் நேற்று முன்தினம் கடலூர் – விருத்தாசலம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக [அறிக்கை](https://minnambalam.com/k/2019/06/11/36) வெளியிட்ட பாமக நிறுவனர் ராமதாஸ், விக்னேஷ் கொலை செய்யப்பட்டதாகக் குற்றம் சாட்டியிருந்தார். மேலும் ராதிகா, விக்னேஷ் மரணத்துக்குக் காரணம் விசிகவைச் சேர்ந்த நிர்வாகி என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சிதம்பரத்தில் நேற்று (ஜூன் 11) செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “நெய்வேலி அருகே குறவன்குப்பன் கிராமத்தில் கல்லூரி மாணவி ராதிகா, அவரை திருமணம் செய்துகொள்வதாக இருந்த விக்னேஷ் ஆகியோர் தற்கொலை செய்துகொண்ட தகவல் அதிர்ச்சியளிக்கிறது. அந்த இரு உயிர்களும் பலியாவதற்குக் காரணமாக இருந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் ஆதாயத்துக்காக இப்படிப்பட்ட பிரச்சினைகளைப் பயன்படுத்த அரசும் அதிகாரிகளும் இடம்கொடுத்துவிடக் கூடாது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “சமூக வலைதளங்கள் ஆக்கபூர்வச் செயல்களுக்குப் பதிலாக சமூக சீர்கேடுகளுக்குப் பயன்படுவது வேதனையளிக்கிறது. முகநூல் பக்கங்களில் தாறுமாறாகப் பதிவுகள் வெளியிடுவது, புகைப்படங்கள் வெளியிடுவது போன்ற நடவடிக்கைகளில் இளம் தலைமுறையினர் ஈடுபட்டு, அதனால் பல்வேறு சமூகச் சிக்கல்கள் எழுகின்றன. வாழ வேண்டிய பருவத்தில் இரண்டு பேர் பலியாகும் அவலமும் ஏற்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் பரவிவரும் தீங்காக சமூக வலைதளக் கருத்துகள் உள்ளன” என்று குறிப்பிட்டுள்ள திருமாவளவன், மத்திய அரசு சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவது தொடர்பாக உரிய வரையறைகளை வகுக்க வேண்டும். சமூக சிக்கல்கள் எழாத அளவுக்குக் கட்டுப்பாடுகளை வரையறுக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தினார்.

அரபு நாடுகளில் சமூக வலைதளங்களின் பயன்பாடு மிகுந்த கட்டுப்பாட்டில் உள்ளதாகத் தெரிவித்த அவர், அங்கு ஆபாச வலைதளங்களைப் பயன்படுத்த முடியாத அளவு, தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும், அதை ஏன் இந்திய அரசு பின்பற்றக் கூடாது எனவும் கேள்வி எழுப்பினார்.

**

மேலும் படிக்க

**

**

[டிஜிட்டல் திண்ணை: ஆலோசனைக் கூட்டம்! எடப்பாடி-பன்னீர் க்ளைமேக்ஸ் ஒப்பந்தம்!](https://minnambalam.com/k/2019/06/11/65)

**

**

[உள்ளாட்சித் தேர்தல் நடக்காது: அமமுக எச்சரிக்கை](https://minnambalam.com/k/2019/06/11/55)

**

**

[அதிமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்!](https://minnambalam.com/k/2019/06/11/26)

**

**

[கலெக்டர் ரோகிணியை எகிறிய எடப்பாடி](https://minnambalam.com/k/2019/06/10/46)

**

**

[செக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!](https://minnambalam.com/k/2019/06/09/36)

**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share