�
இணையத்தில் புதிய அலையை ஏற்படுத்திவரும் நெட்ஃப்ளிக்ஸின் புதிய அப்டேட்டில் புதிய வசதிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
தியேட்டர்களுக்கு செல்ல முடியாதவர்களுக்கும், திருட்டுத் தளங்களில் படங்களைப் பார்க்க விரும்பாதவர்களுக்கும் கிடைத்த ஒரு வரப்பிரசாதம் என்றே நெட்ஃப்ளிக்ஸைக் கூறலாம். கொஞ்சம் காஸ்ட்லிதான் என்றாலும் தரமான கன்டென்டுகளைத் தொடர்ந்து வழங்கிவருவதால் இந்திய மார்க்கெட்டில் நெட்ஃப்ளிக்ஸின் வளர்ச்சி ஏறுமுகத்திலேயே இருக்கிறது.
வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் தமது செயலியில் அவ்வப்போது அப்டேட்டுகளைக் கொண்டுவரும் நெட்ஃப்ளிக்ஸ், தற்போது ஐஓஎஸ் மொபைல் போன்களுக்கான தமது செயலியில் புதிய வசதிகளைக் கொண்டுவந்துள்ளது. அதன்படி, யூடியூப் மற்றும் நெட்ஃப்ளிக்ஸ் ஆண்ட்ராய்டு போன்றவற்றில் உள்ளதுபோல இனி ஐஓஎஸ் நெட்ஃப்ளிக்ஸிலும் வீடியோக்களை 10 வினாடிகள் ஃபார்வர்டு மற்றும் பேக்வர்டு செய்துகொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
சிறிய அளவிலான ப்ளே மற்றும் பாஸ் பட்டன்கள் இருப்பதால் டச் போன்களில் வீடியோவை சரியாகக் க்ளிக் செய்யமுடியாமல் இருந்துவந்தது. அதைப் போக்குகிற விதமாகத் தற்போது பெரிய அளவிலான பட்டன் வசதிகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மேலும், லேபிள் வசதியும் இதில் உள்ளது. இதன் வாயிலாக தேவையான வீடியோக்களை எபிஸோடுகளில் சென்று தேடிப் பார்த்துத் தெரிந்துகொள்ள முடியும்.
ஆப் ஸ்டோர்களில் Netflix app, version 11.12.0 iOSயை டவுண்லோடு செய்துகொள்வதன் வாயிலாக இந்த புதிய அப்டேட்டுகளைப் பெற முடியும்.�,