பவானிசாகர் நீர் நிர்வாகத்தில் தவறு நடக்கவில்லை என நிரூபிக்கும் வேட்பாளருக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என கீழ்பவானி விவசாயிகள் நலச்சங்கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து கீழ்பவானி விவசாயிகள் நலசங்கத்தின் தலைவர் நல்லசாமி கூறுகையில், தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய அணை பவானிசாகர். பல ஆண்டுகளாக அணை நீர் நிர்வாகத்தில் அரசு ஆணைகள் பின்பற்றப்படவில்லை. விதிமுறைகளும் முறையாக கடைபிடிக்கப்படவில்லை. விருப்பு, வெறுப்பு மற்றும் ஆதாய அடிப்படையிலேயே நீர் நிர்வாகம் நடந்து கொண்டிருக்கிறது. நீர் நிர்வாகத் தவறுகளை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றாலும், எந்த பயனும் இல்லை. தவறான நீர் நிர்வாகமானது பாசனப் பயனாளிகளிடையே மோதலை ஏற்படுத்துகிறது. நீர் பங்கீடு தொடர்பான வழக்குகளை உச்ச நீதிமன்றம் வரை கொண்டு செல்ல வைத்துள்ளது. தவறான நீர் நிர்வாகம் பிரித்தாளும் சூழ்ச்சியின் வெளிப்பாடே ஆகும்.
அதனால், தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. பவானி பாசனம் பெறும் நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் நீர் நிர்வாகத்தில் தவறுகள் ஏதும் நடைபெறவில்லை என நிரூபித்துவிட்டால் கீழ்பவானி விவசாயிகள் நலச்சங்கம் சார்பில் ஒரு கோடி ரூபாய் பரிசளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
�,