நீருக்குப் பதிலாக பீர் குடிக்க வேண்டுமா? – சிவசேனா ராக்ஸ்!

public

eமஹாராஷ்டிர மாநிலம், ஓளரங்காபாத் பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது. தொழிற்சாலைகளுக்கான ஒதுக்கீட்டின் அடிப்படையிலேயே சாராய ஆலைகளுக்கு தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது என்றும், குடிநீருக்காகச் சாராய ஆலைகளுக்கு அனுப்பும் நீரை நிறுத்தமுடியாது எனவும் மாநில ஊரகவளர்ச்சித் துறை அமைச்சர் பங்கஜா முண்டே கூறினார். இதற்கு சிவசேனைத் தலைவர் உத்தவ் தாக்கரே கடும்எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில் சிவசேனைப் பத்திரிகையான சாம்னாவில் வெளியான செய்திக்குறிப்பில், ‘பீர் ஆலைகளுக்குத் தடையில்லாமல் தண்ணீர் அனுப்பவேண்டும் என்று பாஜக எம்பி-க்கள் விரும்புகிறார்கள். மனிதர்களைப் பற்றி அவர்களுக்கு கவலையில்லை. குடிநீருக்குப் பதிலாக பீரைக் குடிக்க முடியாது. வறட்சி பாதித்தப் பகுதிகளில் குடிநீரைக் காசு கொடுத்து வாங்கும் அளவுக்கு மக்கள் வசதி படைத்தவர்களாக இல்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலளித்திருக்கும் மஹாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவீஸ், ஒளரங்காபாத் மண்டல ஆணையரிடம் அறிக்கைக் கேட்டிருப்பதாகவும், விரைவில் இதற்கு தீர்வு காணப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *