நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மாநகராட்சி ஆணையருக்கு சிறை!

Published On:

| By Balaji

C

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மதுரை மாநகராட்சி ஆணையருக்கு ஒரு வார கால சிறைத் தண்டனை மற்றும் 5,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

வருவாய் உதவியாளர்கள் மற்றும் இளநிலை உதவியாளர்கள் பணி மூப்பு தொடர்பாக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம். மதுரை மாநகராட்சி வருவாய் உதவியாளர்களுக்கு நான்கு வாரங்களில் பதவி உயர்வு வழங்க வேண்டுமென்று, 2016ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை அமல்படுத்தாத தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைச் செயலாளர் பனீந்தர ரெட்டி, நகராட்சி நிர்வாக ஆணையர் பிரகாஷ், மதுரை மாநகராட்சி ஆணையர் அனீஸ் சேகர் ஆகியோருக்கு எதிராக விஜயகுமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இன்று (மார்ச் 11) இந்த மனுவை விசாரித்தார் நீதிபதி முரளிதரன். நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல் மதுரை மாநகராட்சி ஆணையர், நீதிமன்ற அவமதிப்பு குற்றம் புரிந்துள்ளது நிரூபணமாகியுள்ளது எனவும், இதற்குத் தண்டனை வழங்காமல் இருந்தால் தவறான முன்னுதாரணமாகிவிடும் எனக் கூறி, அவருக்கு ஒரு வார காலச் சிறையும், 5,000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைச் செயலாளர் பனீந்திர ரெட்டிக்கு உத்தரவிட்டார் நீதிபதி.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share