நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் கொண்டுவந்தபின் நீட் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்னும் கோரிக்கை எழுந்துள்ள நிலையில், மருத்துவ படிப்புக்கான, ’நீட்’ என்னும் அகில இந்திய மருத்துவ நுழைவு தேர்வின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு மே 7ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.நீட் நுழைவுத் தேர்வை எழுத விரும்புபவர்கள் வரும் 23ம்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்றும், www.cbseneet.nic.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாறிவிட்ட கால சூழலில் கல்வியும் பல விதத்தில வளர்ச்சி அடைந்து வருகிறது. அதற்கேற்றவாறு பாடதிட்டத்தையும் மாற்றினால் தான் மாணவர்களும் கல்வியில் முன்னேற்றம் காண முடியும். பாட திட்டத்தில் மாற்றம் வந்தால் தான் பல நுழைவு தேர்வுகளையும் சிரமமின்றி எதிர்கொண்டு வெற்றி பெற முடியும்.
ஆனால், தமிழகத்தில், 11ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புப் பாடத்திட்டத்தை மாற்றாதவரை ‘நீட்’ தேர்விலும், ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்விலும் தமிழக மாணவர்கள் வெற்றிபெறுவது கடினம். கடந்த ஆண்டு நடந்த தேர்வில் முதல் இடங்களை பிடித்தவர்களும் வெளி மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
�,