மீம் பேஜ் வெச்சிருக்க ஃப்ரெண்டு ஒருத்தனை டீக்கடைல பாத்தேன். ‘டேய், அமைச்சர் ஜெயக்குமார் மேல கேஸ் போடப்போறேன்’ அப்டின்னான். என்னடா பிரச்சினை எதுவா இருந்தாலும் பேசித் தீத்துக்கலாம் வான்னு சொல்லி, ஒரு டீ போட சொன்னேன். ‘அது இல்ல மச்சான். நீட் தேர்வுல ஆள்மாறாட்டம் பண்றதுக்கு காரணமே கமல் வசூல் ராஜா நடிச்சது தான் அப்படின்னு சொல்லிட்டாருடா அமைச்சரு. அந்த மீம் நான் பத்து நாள் முன்னாடியே போட்டுட்டேன். இவர் அதை காபி பண்ணி சொல்லிட்டார். எனக்கு கிரெடிட்ஸ் குடுக்கவே இல்லை” அப்டின்றான். டேய் அப்படி பாத்தா அவர் தினமும் ஆயிரம் கேஸ் போடவேண்டியது வரும். மீம் கிரியேட்டர்ஸ்னு ஒரு இனமே இல்லாம போகும். விட்டுட்டு போடான்னு சொன்னா ‘அது இல்லைடா. நான் மநீம கட்சில சேர்ந்து, ஐடி விங் மாதிரி இதை தான் செஞ்சு செயல்பட்டுக்கிட்டு இருக்கேன். இது கட்சிக்கும் பலமா இருக்கும் அப்டின்றான். அடேய், வாய மூடு. கமல் அபூர்வ சகோதரர்கள் படத்துல முகமூடி போட்டு கொலை பண்றா மாதிரி நடிச்சதுனால தான், லலிதா ஜுவல்லரிலயும் அதேமாதிரி திருடியிருக்காங்கன்னு சொல்லி கமலை அரெஸ்ட் பண்ணாம விட்டாங்களேன்னு சந்தோசப்படுன்னு சொன்னது தான் லேட்டு, சரி மச்சான் நான் ஆஃபீஸ் போய்ட்டு வர்றேன்னுட்டு கிளம்பிட்டான். அவன் போய்ட்டாலும், அந்த ஐடியா நல்லா இருந்தது. எதுக்கும் நான் போய் இந்த மேட்டரை மாஃபா கிட்ட சொல்லிட்டு வர்றேன். நீங்க அப்டேட்டை படிங்க.
**????????ℕ????????ℕ**
கொடுமை” என்பது யாதெனில்,
நாலு இடத்துக்கு போகபயன்படும்ன்னு கார் வாங்கி,
கடைசியில கார் வாங்கிட்டோமேன்னு, “நாலு இடத்துக்கு போயிட்டு வர்றது”தான்…!!!
**நல்ல நண்பன் **
யாருக்கும் எதுவும் தெரியாது என நினைக்காதீர்கள்.. பல சமயங்களில் அவர்களுக்கு தெரிந்தது நமக்கே தெரியாதவைகளாக இருக்கலாம்.
**பாண்டி பிரகாஷ்**
உங்கள் பேச்சோ செயலோ மற்றவர்களால்
ரசிக்கப்படும் வரைதான் நீங்கள் நல்லவர்கள்..
**இதயவன்**
“பேரறிஞர் அண்ணா விற்கு பிறகு அதிக புத்தகங்கள் படித்தவன் நான்தான்” -எடப்பாடி!
கம்பர் க்கும் சேக்கிழார்க்கும் சண்ட இழுத்து வைச்சப்பயே தெரியுமே நீங்க தான்னு
பாக்கவே ஆச்சரியமா இருக்கு.. விலங்குகளுக்கு ஐந்து அறிவுனு சொன்னது பொய்யா இருக்குமோ? pic.twitter.com/JqV3ldVLJJ
— ❛ Bad Boy ❜ (@_Ravanan_) October 2, 2019
**Kondalsamy**
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஒரே நாளில் ஒன்றரை லட்சம் பேருக்கு வேலை கொடுத்தார் என்று தமிழ்நாட்டு செய்திகள் பரபரப்பாக செய்தி போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
ஊடகத்தாரே! தமிழகத்தில் சுமார் 4.5லட்சம் அரசு பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கிறது என்பதையும் சேர்த்து சொல்லுங்கள்.
**திமிரழகி**
நீங்கள் தேடும்போது நான் கிடைக்கவில்லை எனில்,
உங்களை நாடிய போது நீங்கள் மதிக்கவில்லை எனக் கொள்க …. 🙂
**நட்சத்திரா**
மிளகா பஜ்ஜியாக நீயும்…
தேங்காய் சட்னியாக நானும்…
பில்டர் காபியாக நம் காதலும்..
இருக்கும் வரை வாழ்க்கை இனிதே
**அசுரன்**
பயணத்தில்,
பிரியங்கொண்டவர்கள் – தோள்சாய்ந்து தூங்கும்போது,
தூக்கம் கலைந்துவிடாமல் இருக்கச்செய்யும் கவனங்கள்…!
எங்க புள்ளிங்கோ எல்லாம்..???? pic.twitter.com/7TT8aweH0G
— ஆஹான்!! ???? (@Kadhar_Twitz) October 2, 2019
**எமகாதகன்**
பாஜகவுடன்
கூட்டணி வைத்தால் ரஜினிகாந்த்
நிச்சயம் முதல்வராவார்
-எஸ் வி சேகர்
அட லூசு இப்போது
ஆட்சியிலிருக்கும் அதிமுகவுடன்
வருகின்ற சட்டமன்றத் தேர்தலில்
பாஜக கூட்டணி அமைத்தாலே
அதிமுக ஆட்சியமைக்காது
படு தோல்வியை தழுவும்
போவியா அங்கிட்டு
**தமிழினி**
தால் இன்றி வார்த்தையில்லை!
தாள் இன்றி வெற்றியில்லை!
தாழ் இன்றி பெருமையில்லை!
-நிதர்சனம்
**யாதுமானவள் (மகளுக்கு)**
புலம்புவதாலோ , கவலைகளாலோ பயனில்லை எனும்பொழுது
வெகுசிறப்பாய் இருப்பதாய்
நமைநாமே நம்பவைத்தல் நலம்
**Pachai Perumal.A**
இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு குறித்து பாஜக செய்தி வெளியிடவில்லை என்பது பெரிய விஷயம் இல்லை!- அமைச்சர் ஜெயக்குமார்.
உங்களுக்கு எதுதான் பெரியவிசயம்?
**ம ன் ன ன்**
புத்தகம்
அறிவை
புகுத்த தகும்..
**ராஸ்கல்**
சிறகிருந்தால் பறந்திடுவேன் என யோசிப்பதை விட கால்கள் இருக்கே என நினைத்து வழிகளை தேடுவோம்
**Mr.கட்டெறும்பு**
பிரிந்து போனவர்களை பார்க்காமலே இருப்பது விருப்பம் இல்லாமல் இல்ல, தைரியம் இல்லாமல் கூட இருக்கும்..!
**ஜோக்கர்**
ரத்த தானம் செய்ய மக்கள் பெருமளவில் முன்வர வேண்டும் ~ முதலமைச்சர்
“பேனர்” வைக்க பெர்மிஷன் வாங்கிட்டாராம்.
-லாக் ஆஃப்
�,”