}நீட் தேர்விலிருந்து விலக்கு : திருநாவுக்கரசர்

Published On:

| By Balaji

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு நடத்த தமிழகத்தில் நெல்லை உட்பட மேலும் 3 நகரங்களில் மையங்கள் அமைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து திருநாவுக்கரசர் கூறுகையில், ‘சமச்சீர் பள்ளி, மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும் 9 லட்சம் மாணவர்கள், சிபிஎஸ்சி மாணவர்களோடு போட்டிபோட்டு வெற்றிபெற முடியாது. எனவேதான், ஜெயலலிதா காலத்திலேயே நீட் தேர்வுக்கு தமிழகத்தில் விதிவிலக்கு பெறப்பட்டது. ஆனால் ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு அதிமுக அரசு மத்திய அரசின் இந்த நீட் தேர்வுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு தற்போது நீட் தேர்வு பிரச்னை விஸ்வரூபம் எடுத்தநிலையில், தமிழக சட்டசபையில் அதற்கு எதிராக தீர்மானம் போட்டுள்ளது. இது பொதுமக்களை ஏமாற்றும் வேலையாகும்.

இந்த நீட் தேர்வு விவகாரத்தில் இனியும் காலதாமதம் செய்யாமல் தமிழக அரசு, மத்திய அரசை வலியுறுத்தி தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்விலிருந்து விதிவிலக்கு பெறவேண்டும் என்று கூறினார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel