நீட்-சிறப்பு சட்டமன்றம்: முதல்வர்!

public

நீட் மசோதாக்கள் திருப்பி அனுப்பப்பட்டது குறித்து மத்திய அரசிடம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார். இவ்விவகாரத்தில் தேவைப்பட்டால் சிறப்பு கூட்டம் கூட்டி முடிவெடுக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

2017ல் தமிழக சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நீட் மசோதாக்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இன்றைய சட்டமன்றத்தில், கேள்வி நேரத்தின் போது பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், “தமிழக அரசு அனுப்பிய 2 மசோதாக்கள் 2017ஆம் ஆண்டே திருப்பி அனுப்பப்பட்டதாக மத்திய அரசு கூறியுள்ளது. இதை ஏன் மறைத்தீர்கள். அவைக்கு மாறாக செயல்படுகிறீர்கள். இதனை முன்பே தெரிவித்திருந்தால் மீண்டும் சட்டம் இயற்றி அனுப்பியிருக்கலாமே, தற்போது தமிழக அரசால் மீண்டும் சட்டம் இயற்றி அனுப்ப முடியுமா என்று பல்வேறு கேள்விகளை எழுப்பி, இவ்விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார்.

இதற்கு பதில் அளித்து பேசிய சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம், நீட் விவகாரத்தில் நாங்கள் எதுவும் பொய் கூறவில்லை. மசோதா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவே எங்களுக்கு தகவல் வந்தது. மசோதாவை ஏன் நிறுத்தி வைத்துள்ளீர்கள் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு இதுவரை 12 கடிதங்கள் அனுப்பியுள்ளது. ஆனால் தற்போது வரை அதற்கான காரணத்தை மத்திய அரசு தெரிவிக்கவில்லை. காரணம் தெரிந்தால் தான் அந்த மசோதாக்களையே திருப்பி அனுப்ப முடியுமா, அல்லது மீண்டும் சட்ட மசோதாக்கள் இயற்ற முடியுமா என்பது குறித்து முடிவு செய்ய முடியும். மத்திய அரசு தாக்கல் செய்துள்ள அறிக்கையிலும் நிராகரிப்பு என்று எதுவும் இல்லை. இவ்விவகாரத்தில் விளக்கம் கேட்ட பின் மத்திய அரசு மீது வழக்கு தொடர்வது பற்றி முடிவு செய்யப்படும் என்று பேசினார்.

அமைச்சரைத் தொடர்ந்து பேசிய முதல்வர், “நீட் விவகாரத்தில் மத்திய அரசிடம் இருந்து எந்த பதிலும் வராவிட்டால் சிறப்புக் கூட்டம் கூட்டி முடிவெடுக்கப்படும் என்றும் அறிவித்தார்.

**

மேலும் படிக்க

**

**[டிஜிட்டல் திண்ணை: சூர்யாவை தொலைபேசியில் மிரட்டிய அமைச்சர்!](https://minnambalam.com/k/2019/07/16/84)**

**[மணிரத்னம் – நயன்: உருவாகும் வித்தியாசமான கூட்டணி!](https://minnambalam.com/k/2019/07/17/20)**

**[தயாராகிறது பாகுபலி 3?](https://minnambalam.com/k/2019/07/16/26)**

**[30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/07/16/18)**

**[ “மாற்று வேட்பாளரை மாற்றுங்கள்”- துரைமுருகனிடம் ஸ்டாலின்](https://minnambalam.com/k/2019/07/16/53)**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *