நீட் ஆள்மாறாட்ட வழக்கு பூதாகரமாகியுள்ள நிலையில் அதற்கு வித்திட்டவர் கமல்ஹாசன் என்று மீன் வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வில் உதித் சூர்யா ஆள் மாறாட்டம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டதைதொடர்ந்து இந்த வழக்கில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. அடுத்தடுத்துமாணவர்கள் கைது,மாணவர் இர்ஃபானின் தந்தை போலிமருத்துவர் என அதிர்ச்சியூட்டும்தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. தொடர்ந்து சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணைநடத்தி வரும் நிலையில் பல்வேறு தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இதனை விசாரிக்கும் போது வசூல்ராஜாஎம்பிபிஎஸ் படம் நினைவுக்கு வருவதாகத் தெரிவித்தது.
இந்நிலையில் இன்று (அக்டோபர் 2) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமாரிடம் நீட் ஆள் மாறாட்டம் செய்தது குறித்து கேள்விஎழுப்பப்பட்டது. அப்போது பேசிய அமைச்சர் நீட் ஆள்மாறாட்டத்துக்கு, வசூல்ராஜா எம்பிபிஎஸ் படம் மூலம் வித்திட்டவர் கமல் தான் என்று விமர்சித்துள்ளார். பிக்பாஸ் வீட்டிற்குள் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. அதுஅலிபாபா குகை போல உள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி கலாச்சார சீரழிவு என்றும் கூறினார்.
வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் மருத்துவ படிப்பு நுழைவுத் தேர்வைக் கமலுக்கு பதில் மருத்துவராகஇருக்கும் கிரேஸி மோகனை மிரட்டி தேர்வு எழுத வைப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நீட் ஆள்மாறாட்டவழக்கில் புதிய திருப்பமாக மருத்துவ கல்வி இயக்குநரகத்திற்கு நோட்டீஸ் அனுப்ப சிபிசிஐடிதிட்டமிட்டுள்ளது. முதலாமாண்டு மாணவர்களின் சான்றிதழ், நீட் ஹால் டிக்கெட் உள்ளிட்டஆவணங்களை மீண்டும் சரிபார்க்க வேண்டும்.மாணவர்களின் முன்பே இந்த சோதனையை நடத்த வேண்டும்என வலியுறுத்த சிபிசிஐடி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.�,