நேரம் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் மலையாளத்தில் ‘பிரேமம்‘ என்கிற ஹிட் படத்தை கொடுத்தார். அந்தப்படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் கழிந்த நிலையில் தனது அடுத்த படத்தின் அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளார். இதில் சித்தார்த், காளிதாஸ் இணைந்து நடிக்கவுள்ளனர்.
நேரம்,பிரேமம் ஆகிய இரு படங்களிலும் நிவின் பாலி கதாநாயகனாக நடித்திருந்ததால் அல்போன்ஸ் புத்திரனின் அடுத்த படத்திலும் அவரே நடிப்பார் என்ற செய்திகள் வெளியானது. இந்நிலையில் தற்போது, புதிய படத்தில் சித்தார்த், காளிதாஸ் ஜெயராம் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ், மலையாளம் ஆகிய இருமொழிகளில் உருவாகவுள்ள இப்படத்திற்கான ஆயத்த பணிகள் சென்னையில் நடைபெற்று வருகின்றன. அல்போன்ஸின் முந்தைய படங்களில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் ஆனந்த் சி.சந்திரன் மற்றும் இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன் ஆகிய இருவரும் இதிலும் பணிபுரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘நடிப்பு மற்றும் கர்நாடக இசை’ தெரிந்த புதுமுக நடிகை தேவை என்பதால் அதற்கான நடிகையர் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.�,