}நிறுத்தப்பட்ட ரயில்கள்: ஏப்ரல் 1 முதல் இயக்கம்!

Published On:

| By admin

கொரோனா காலக்கட்டத்தில் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மீண்டும் இயங்கும் என்று தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி – புதுச்சேரி (வண்டி எண்:16111) இடையே காலை 4.20 மணிக்கும், மறுமார்க்கமாக புதுச்சேரி – திருப்பதி (16112) இடையே மதியம் 2.55 மணிக்கும் புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் வருகிற ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து மீண்டும் இயக்கப்படும்.
சூலூர்பேட்டை – நெல்லூர் (06747) இடையே மதியம் 3.50 மணிக்கும், மறுமார்க்கமாக நெல்லூர் – சூலூர்பேட்டை (06748) இடையே மாலை 6.50 மணிக்கும்,
திருவனந்தபுரம் சென்ட்ரல் – நாகர்கோவில் (06433) இடையே காலை 6.50 மணிக்கும், மறுமார்க்கமாக நாகர்கோவில் – திருவனந்தபுரம் சென்ட்ரல் (06428) இடையே மாலை 6.20 மணிக்கும்,
மூர்மார்க்கெட் – சூலூர்பேட்டை (06743) இடையே மதியம் 1.15 மணிக்கும், மறுமார்க்கமாக சூலூர்பேட்டை – மூர்மார்க்கெட் (06744) இடையே இரவு 8.45 மணிக்கும் புறப்படும்.
முன்பதிவில்லாத தினசரி எக்ஸ்பிரஸ் ரயில்கள் வருகிற ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து மீண்டும் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

**-ராஜ்**

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment