நிர்மலா தேவி: வழக்கு விசாரணைக்குத் தடை நீக்கம்!

Published On:

| By Balaji

உதவி பேராசிரியை நிர்மலா தேவி வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இன்று (ஜூலை 12) உத்தரவிட்டுள்ளது.

கல்லூரி மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பேராசிரியர் நிர்மலா தேவி தற்போது ஜாமீனில் உள்ளார். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வந்த நிலையில் அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க பொதுச் செயலர் சுகந்தி, இவ்வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், “இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட பல்கலைக் கழகத்தை சேர்ந்த பலருக்குத் தொடர்புள்ளது. ஆனால் அவர்களின் பெயர்கள் வழக்கில் சேர்க்கப்படவில்லை. யாருக்காக நிர்மலா தேவி அவ்வாறு செய்தார் என விசாரிக்கவில்லை. சிபிசிஐடி போலீசார் நியாயமாக விசாரிக்காமல் குற்றப்பத்திரிக்கையை ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். எனவே ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்ற விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்” என்று கோரியிருந்தார்.

இதனை விசாரித்த நீதிமன்றம் கீழமை நீதிமன்ற விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்திருந்தது. இந்த வழக்கு மீண்டும் இன்று (ஜூலை 12) விசாரணைக்கு வந்தபோது, இவ்வழக்கில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்திக் குற்றப்பத்திரிகை மற்றும் இறுதி அறிக்கை தாக்கல் செய்துள்ளதால் இதில் இந்நீதிமன்றம் தலையிட முகாந்திரம் இல்லை. சாட்சிகளின் அடிப்படையில் கூடுதலாக குற்றவாளிகளைச் சேர்ப்பதற்கு விசாரணை நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் நிர்மலா தேவி வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை நீக்கியும் உத்தரவிட்டுள்ளது.

**

மேலும் படிக்க

**

**[ மோடிக்கு தயாநிதியை தூது அனுப்பினாரா ஸ்டாலின்?](https://minnambalam.com/k/2019/07/12/24)**

**[டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினுக்கு எதிராக எடப்பாடிக்கு டெல்லி போட்டுத் தந்த ப்ளான்!](https://minnambalam.com/k/2019/07/11/76)**

**[ஏ.எல்.விஜய் திருமணக் கொண்டாட்டம்!!](https://minnambalam.com/k/2019/07/12/19)**

**[அத்திவரதரை தரிசித்த விஜயகாந்த்](https://minnambalam.com/k/2019/07/11/29)**

**[பாரதியார் பாடல்: நிர்மலாவைப் பாராட்டிய சிதம்பரம்](https://minnambalam.com/k/2019/07/12/25)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share