கல்லூரி மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல முயன்ற வழக்கில், ஜாமீன் பெற்ற நிர்மலா தேவிக்கு சிறையில் இருந்து வெளியே வருவதில் சிக்கல் உருவாகியுள்ளது.
அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு வழிநடத்த முயன்றதாக பேராசிரியை நிர்மலா தேவி, உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் கருப்பசாமி, முருகன் ஆகியோர் கடந்த மாதம் ஜாமீனில் வெளியே வந்தனர். 11 மாதங்களுக்குப் பிறகு நேற்று (மார்ச் 12) நிர்மலாதேவிக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை ஜாமீன் வழங்கியது.
ஒருவருக்கு ஜாமீன் கிடைத்தால், வெளிவருவதற்கான ஆவணத்தில் அவரின் ரத்த உறவுகள் அல்லது நண்பர்கள் கையெழுத்திட வேண்டியது அவசியம். ஆனால், ஜாமீன்தாரர்களாக பொறுப்பேற்று நிர்மலா தேவியை அழைத்துச் செல்லவும், ஆவணங்களில் கையெழுத்திடவும் உறவினர்கள் யாரும் முன்வரவில்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து அவரது வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் கூறுகையில், நிர்மலா தேவியின் உறவினர்களை சமாதானப்படுத்தி வருவதாகவும், இன்று எப்படியும் நிர்மலா தேவியை வெளியில் கொண்டு வந்து விடுவோம் என கூறினார்.
நிர்மலா தேவி சிறையில் இருந்த இத்தனை நாட்களில் அவருடைய உறவினர்கள் யாரும் சென்று பார்க்கவில்லை. அவருக்காக ஜாமீன் மனு தாக்கல் செய்யக் கூட யாரும் முன்வரவில்லை.�,