நிர்பயா வழக்கு: நாளை மறுசீராய்வு மனு மீதான தீர்ப்பு!

public

நிர்பயா வழக்கில் குற்றவாளிகளின் மறுசீராய்வு மனு மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நாளை (ஜூலை 9) வழங்க உள்ளது.

டெல்லியில், 2012ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி இரவு, ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி ஒருவர் (ஊடகங்கள் வைத்த பெயர் நிர்பயா) ஆறு பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது . இதனைத் தொடர்ந்து குற்றவாளிகள் ஆறு பேரும் கைது செய்யப்பட்டனர்.

குற்றவாளிகளில் ஒருவர் சிறுவன் என்பதால் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டார். முக்கிய குற்றவாளியான ராம்சிங் 2014ஆம் ஆண்டு சிறையில் தற்கொலை செய்துகொண்டார். முகேஷ், பவன், வினய், அக்ஷய் ஆகியோருக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. அதை மேல்முறையீட்டில் 2017இல் உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

முகேஷ், பவன், வினய், அக்ஷய் ஆகியோர், மரண தண்டனையை குறைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுத் தாக்கல் செய்தனர். இம்மனு மீதான தீர்ப்பு கடந்த மே 4ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, இந்த மறுசீராய்வு மனு மீதான தீர்ப்பை நாளை வழங்க உள்ளது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *