அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இந்திய திரைப்பட விழா ஒவ்வொரு வருடமும் நடைபெற்று வருகிறது. இந்தாண்டுக்கான விழா, மே மாதம் தொடங்க உள்ளது. இதில் இந்தியாவில் இருந்து பல்வேறு படங்கள் திரையிடப்படுகின்றன.
தமிழில் இருந்து சுரேஷ் சங்கையா இயக்கத்தில் விதார்த் நடித்துள்ள ஒரு கிடாயின் கருணை மனு, ஜெகதீசன் சுபு இயக்கத்தில் மதயானைக் கூட்டம், கிருமி ஆகிய படங்களின் கதாநாயகன் கதிர் நடித்துள்ள சிகை, நடிகர் விஜய் சேதுபதியின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் லெனின் பாரதியின் இயக்கத்தில், ‘தேனி’ ஈஸ்வர் ஒளிப்பதிவில் ஏற்கனவே பல்வேறு திரைப்படவிழாக்களில் விருது வென்றுள்ள ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ ஆகிய படங்கள் திரையிடப்படுகின்றன.
இதுபற்றி ஒரு கிடாயின் கருணை மனு பட இயக்குநர் சுரேஷ் சங்கையா கூறும்போது, ‘மே மாதம் 6-ம் தேதி தமிழ்ப் படங்கள் திரையிடப்பட இருக்கின்றன. அதற்காக நாங்கள் அங்குச் செல்ல இருக்கிறோம். இன்னும் சில பட விழாக்களில் இந்தப் படம் திரையிடப்பட இருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.�,