நியூட்டனுக்கு அப்புறம் ஆப்பிள் இவருக்கு தான்: அப்டேட் குமாரு

Published On:

| By Balaji

காலையிலயே ஒருத்தர் இன்பாக்ஸ்ல வந்து திண்டுக்கல் சீனிவாசன் மாம்பழம் சின்னத்துக்கு ஓட்டு கேட்குறதுக்கு பதிலா ஆப்பிள் சின்னத்துக்கு ஓட்டு போட சொல்லிருக்காராம்னு சொன்னாரு. முன்னால இப்படி ஒரு மேட்டர் வந்தா நல்லா வச்சு விளையாடலாம். இப்ப அவரையே அடிச்சு போர் அடிச்சுருச்சு. இனிமேல் திண்டுக்கல் எதையாவது கரெக்டா சொன்னாருன்னா வந்து சொல்லுங்க.. அதை வச்சு செய்வோம். மாத்தி சொல்றதுதான் அவருக்கான பிராண்டா மாறிருச்சுன்னு சொன்னேன். அவங்க சின்னம் இரட்டை இலைன்னு மட்டும் யாராவது இப்பவே சொல்லிடுங்க.. அண்ணாவின் சின்னம் உதயசூரியன்னு அதுக்கு ஓட்டு கேட்டாலும் கேட்ருவாரு. என்ன இருந்தாலும் நமக்கு இத்தனை நாள் கன்டன்ட் கொடுத்து உதவுன தெய்வம்ல.. அவர் நல்லதையும் நாம பார்க்கனுமா இல்லையா.. சரி இப்ப அப்டேட்டை பாருங்க ..

**@கருப்பு கருணா**

வாக்குகளுக்காக பரிசுப்பொருளோ பணமோ கொடுப்பதும் வாங்குவதும் தண்டனைக்குரிய குற்றம்

:- தேர்தல் ஆணையம்

பரிசுபொட்டியா குடுக்கலாமா ஆபீசர்ஸ்ஸ்ஸ்?

**@Raajavijeyan**

விண்வெளியிலும் காவலாளியை

நிறுத்தி வைத்திருக்கிறோம்…மோடி

விண்வெளியில சௌகிதாரை நிறுத்தி வச்சுருக்கோம்னு சொல்லலுங்க…ஜி

**@saravananucfc**

ஆசிரியர்; தமிழை வளர்க்க கஷ்டபட்டவங்க யார் யாரு?

மாணவன்; சேரன், சோழன், பாண்டியன், ஹர்பஜன்.

**@nandhu_twitts**

கைய, காலா நினைச்சி கேட்குறதும், ஒரு வரட்டு கெளரவம்’தான்..!!

**@Annaiinpillai**

கல்யாணத்துக்கு போறவங்க யாரும் இனி கிஃப்டோடு போக முடியாது ஏன்னா டோக்கனுக்கு கொடுத்த டிசைன் அப்படி!

**@saravananucfc**

எல்லாத்தையும் மேல இருக்கிறவன் பார்த்துப்பான் என்பது சிசிடிவி தான் அது.

**@Antoleema5**

லலிதா ஜீவல்லரி ஓனக்குத்தான் நம்ம மேல. எவ்ளோ அக்கறை.. ஏப்பா கடவுளே அதுல பாதி பொறுப்பாட்டும் உனக்கு இருக்கா..????

**@mugamoodi11**

எப்போதும் அச்சத்தில் இருப்பதை விட ஆபத்தை ஒருமுறை சந்திப்பதே மேல்..!!

**@Thaadikkaran**

குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டுறது அவ்வளவு சிரமமான்னு கேட்டா, குழந்தைகளுக்கு ஊட்டுறதுக்கு கொண்டு வந்த சாப்பாட்டை நாமலே சாப்பிடுறே அளவுக்கு நம்மல டயர்டு ஆக்கிருவாய்ங்க..!!

**@ajmalnks**

பத்திரிக்கையாளர்: ரைய்டுல என்னலாம் போச்சு??

துரைமுருகன் : நைட்டு வந்ததால தூக்கம் தான் போச்சி..

பத்திரிக்கையாளர் :- எல்லா இடங்களிலும் சோதனை செய்தார்களா?

துரைமுருகன் : என் ரூம்லயும் பண்ணனும் சொன்னாங்க சரி பண்ணுங்கனு நா குளிக்கப்போய்ட்டேன்…

**@SubashiniBA**

பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால்தான் காவிரியில் தண்ணீர் வரும் – தம்பிதுரை

இப்பம் பிரதமர் யார் அக்கா தமிழிசையா தம்பிதுரை

**@amuduarattai**

என்னால் தான் ஸ்டாலின் துணை முதல்வரானார். -ராமதாஸ்.

அப்போ ஏன் அன்புமணி துணை முதல்வராக்கி இருக்கலாமே.!?

**@Akku_Twitz**

திண்டுக்கல்லில் பாமக வேட்பாளருக்கு ஆப்பிள் சின்னத்தில் வாக்கு கேட்ட திண்டுக்கல் சீனிவாசன் – செய்தி #

மொத்தத்துல பாமகக்கு fruit mixture தான் போல

**@Thaadikkaran**

எக்ஸாம் ஸ்டார்ட் பண்ற கொஞ்ச நேரத்துக்கு முன்னே, முக்கியமான கொஸ்டின்னு நாம படிப்பதை, இந்த கொஸ்டின் வராது இதை படின்னு ப்ரெண்ட்ஸ் கன்பியூஸ் பண்ணிவிட்டு. கடைசில நாமே படிச்சதே கொஸ்டினா வரும்போது நம்ம மனசு படுறே பாடு இருக்கே..!

**@RahimGazzali**

எலக்‌ஷன் முடியற வரைக்கும் கல்யாணம், பிறந்தநாள் போன்ற விசேஷங்களில் கலந்துகொள்ள கிஃப்ட் பாக்ஸோடு போக முடியாதுபோல… பொதுவா பார்க்கறவங்க நம்மை அமமுகன்னு நினைச்சுடுவாங்க.

**@gips_twitz**

பாமக வேட்பாளருக்கு ஆப்பிள் சின்னத்தில் வாக்கு கேட்ட அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

அடுத்து பாஜகவுக்கு செம்பருத்தி சின்னத்தில் வாக்கு கேட்பாரு

**@RahimGazzali**

என் மகள் இப்படித்தான் என்று ஒருத்தர் தன் ஒரு வயது இரண்டு வயது மகளை சிலாகித்து பேசும்போது உடனே பக்கத்தில் இருப்பவர் என் மகளும் இப்படித்தாங்க என்று ஆரம்பிப்பது டிசைனில் இருக்கு.

**@kathir_twits**

திண்டுக்கல்லில் பாமக வேட்பாளருக்கு ஆப்பிள் சின்னத்தில் வாக்கு கேட்ட திண்டுக்கல் சீனிவாசன் – செய்தி #

கட்சி தலைவரை குடிசைகளின் காவலன்ன்னு சேர்த்து சொல்லியிருக்கலாம் !

**@Kozhiyaar**

எனக்கு பிடித்த படம் மற்றவருக்கும் பிடிக்க வேண்டும் என்று நினைப்பதும், பிடிக்காதவர் ரசனையற்றவர் என்று கூறுவதும் மூடத்தனமே!

அவரவர் ரசனைக்கு மதிப்பளித்தல் நலம்!!

**@sultan_Twitz**

வைகோ ராசியில்லாதவர் – ஒ.பி.எஸ் #

இன்ஸ்பெக்டரா இருந்து ஏட்டையாவான நீங்க அதிர்ஷ்டத்தை பத்தி பேசலாமா

-லாக் ஆஃப்�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share