கூட்டுறவு நியாய விலைக் கடை பணியாளர்களுக்கு வழங்கப்படும் குடும்ப நல நிதித் தொகையை உயர்த்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் காரணமாக, தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. தேதி குறிப்பிடாமல் அவையைச் சபாநாயகர் தனபால் ஒத்திவைத்தார். நேற்றைய விவாதத்துக்கு இடையே முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
கூட்டுறவுத் துறை குறித்த அறிவிப்புகளை வெளியிட்ட அவர், கூட்டுறவு நியாய விலைக் கடை பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த குடும்பப் பாதுகாப்பு நிதியை உயர்த்திட வேண்டும் என்ற கோரிக்கையைப் பரிசீலனை செய்து, பணியாளர்கள் பணியில் இருக்கும்போது உயிரிழக்க நேரிட்டால், அவர்களது குடும்பத்துக்கு, தற்போது வழங்கப்படும் குடும்ப நல நிதி 2 லட்சம் ரூபாயிலிருந்து 3 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும், “கூட்டுறவு பொது விநியோகத் திட்ட நியாய விலைக் கடை பணியாளர்கள் பணியில் இருக்கும்போது உயிரிழக்க நேரிட்டால், அவர்களது குடும்பத்தின் உடனடி தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு, குடும்ப நல நிதியிலிருந்து தற்போது வழங்கப்பட்டு வரும் 5,000 ரூபாய் முன்பணம், 25,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
கூட்டுறவு பொது விநியோகத் திட்ட நியாய விலைக் கடைகளில் பணிபுரியும் மாற்றுத்திறனாளி பணியாளர்களுக்குத் தற்போது மாதம் ஒன்றுக்கு 1,000 ரூபாயாக வழங்கப்பட்டு வரும் மாற்றுத்திறனாளிப் படி, 2,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
கூட்டுறவு நியாய விலைக் கடை பணியாளர்களுக்கு ஏடிஎம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையைப் பரிசீலித்து, பொது விநியோகத் திட்டப் பணியாளர்களுக்கு, அவர்களது மாத சம்பளம், அவர்களது வங்கிக் கணக்கில் மின்னணு பணப்பரிவர்த்தனை முறை மூலம் வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.
**
மேலும் படிக்க
**
**[டிஜிட்டல் திண்ணை: துரைமுருகனுக்கு திமுக தந்த அதிர்ச்சி – வேலூர் திருப்பம்!](https://minnambalam.com/k/2019/07/20/71)**
**[ டோல் கேட்: தமிழக எம்.பி.க்களை ‘கூல்’ செய்த கட்கரி](https://minnambalam.com/k/2019/07/20/66)**
**[ஆகஸ்டில் இங்கிலாந்து பறக்கும் தனுஷ்](https://minnambalam.com/k/2019/07/20/17)**
**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**
**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்! – 2](https://minnambalam.com/k/2019/07/13/54)**
�,”