பண்டைய நினைவுச் சின்னங்களை செயற்கைக் கோள்கள் படம் பிடிக்க அனுமதிக்கப்படும் நிலையில், சாதாரண மக்களுக்கு ஏன் அந்த வாய்ப்பில்லை என பிரதமர் மோடி கேள்வி எழுப்பியதால் இந்திய தொல்லியல் துறை தடையை விலக்கிக் கொண்டது.
டெல்லியில் நேற்று முன்தினம்(ஜூலை 13) தொல்லியல் துறையின் புதிய அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பண்டைய நினைவுச் சின்னங்களைச் செயற்கைக் கோள்கள் படம் பிடிக்க அனுமதிக்கும் போது, பொதுமக்கள் புகைப்படம் எடுக்க தடை விதித்திருப்பது குறித்து கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து, தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படும் தாஜ்மஹால், அஜந்தா குகை, லே அரண்மனை ஆகிய இடங்களைத் தவிர மற்ற இடங்களில் புகைப்படம் எடுப்பதற்கான தடை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
தொல்லியல் துறை சார்ந்த 3,686 பழமையான நினைவுச் சின்னங்களை தொல்லியல் துறை பராமரித்து வருகிறது. அங்கு புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுக்க பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தடையை நீக்குமாறு புகைப்பட கலைஞர்களும், வரலாற்று ஆய்வாளர்களும் தொல்லியல் துறைக்கு நீண்டகாலமாகக் கோரிக்கை வைத்தனர்.
2016 ஆம் ஆண்டு பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களை புகைப்படம் எடுப்பதற்கு உரிமம் பெறுவதை கட்டாயமாகியது இந்திய தொல்லியல் துறை.�,