நிதி மசோதா: ஜிஎஸ்டியில் ஐந்து சட்டத்திருத்தங்கள்!

Published On:

| By Balaji

நாடாளுமன்றத்தில் நேற்று (ஜூலை 18) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதி மசோதாவை அறிமுகப்படுத்தினார். அப்போது பேசிய நிர்மலா, “நேரடி வரிகள், மறைமுக வரிகள், கறுப்புப் பண சலவை தடுப்புச் சட்டம், நிதிச் சந்தைகள், மத்திய சாலை நிதிகள் ஆகிய ஐந்து பிரிவுகளின் கீழ் சட்டத்திருத்தங்கள் கொண்டுவரப்படுகின்றன.

நேரடி வரிகளுக்குக் கீழ், உற்பத்தியை மேம்படுத்துவதற்காகவும், மேக் இன் இந்தியா திட்டத்துக்காகவும் ஏழு சட்டத்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதில், கட்டண மற்றும் செட்டில்மென்ட் சட்டம், கறுப்புப் பணச் சட்டம், வருமான வரிச் சட்டம், 2015 நிதிச் சட்டம் உள்ளிட்டவை அடங்கும்” என்று தெரிவித்தார்.

மறைமுக வரி தொடர்பான விவகாரங்களை எளிமைப்படுத்தி திறம்பட செயல்படுவதற்காக மறைமுக வரிகளின் கீழ் ஏழு சட்டங்கள் திருத்தப்பட்டுள்ளன. இதில் சுங்கச் சட்டம், சுங்கக் கட்டணச் சட்டம், ஜிஎஸ்டி சட்டம், 2002 நிதிச் சட்டம், 2018 நிதிச் சட்டம் உள்ளிட்டவை அடங்கும்.

சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வரி இணக்கத்தை எளிமைப்படுத்துவதற்காகவும், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்காகவும் ஜிஎஸ்டி சட்டத்தில் மட்டும் ஐந்து சட்டத்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

நிதிச் சந்தைகளைப் பொறுத்தவரையில் செக்யூரிட்டீஸ் ஒப்பந்த ஒழுங்குமுறைச் சட்டம், செபி சட்டம், ரிசர்வ் வங்கிச் சட்டம், காப்பீடு தொடர்பான சட்டங்கள், தேசிய வீடமைப்பு வங்கி தொடர்பான சட்டங்கள் உள்ளிட்டவற்றில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.

**

மேலும் படிக்க

**

**[ அடிக்கப் பாய்ந்த சத்யா – அடக்கிய சேகர்பாபு: சட்டமன்ற காட்சிகள்!](https://minnambalam.com/k/2019/07/18/25)**

**[டிஜிட்டல் திண்ணை: ரஜினி Vs ஸ்டாலின் -ஜோதிடர் மூட்டிய கலகம்!](https://minnambalam.com/k/2019/07/18/82)**

**[அத்திவரதர்: வரிச்சியூர் செல்வத்துக்கு பாஸ் கொடுத்தது யார்?](https://minnambalam.com/k/2019/07/18/54)**

**[மாசெக்களுக்கு தெரியாமல் உதயநிதி நடத்தும் புது ஆபரேஷன்!](https://minnambalam.com/k/2019/07/18/45)**

**[மணிரத்னம் – நயன்: உருவாகும் வித்தியாசமான கூட்டணி!](https://minnambalam.com/k/2019/07/17/20)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share