>நாளை அறிமுகமாகும் மீ ஏ3!

Published On:

| By Balaji

ஷோமி நிறுவனத்தின் மீ ஏ1, மீ ஏ2 என ஆண்ட்ராய்ட் ஒன் தளத்தில் இயங்கும் ஸ்மார்ட்போன்கள் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெறத் தவறவில்லை. மீ ஏ2 ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு வெளியானது. ஷோமியின் MIUI தளம் இல்லாததாலும், விளம்பரங்கள் இல்லாததாலும், ஹார்டுவேர், கேமரா ஆகியவற்றாலும் மீ ஏ2 வெகுவான வரவேற்பை பெற்றது. இந்த சீரிஸில் அடுத்து வெளியாகும் மீ ஏ3 ஸ்மார்ட்போன் மீ ஏ2 ஸ்மார்ட்போனை விட திறன் வாய்ந்ததாகவும், மேம்பட்டதாகவும் இருக்கும் என்று ஷோமி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மீ ஏ3 ஸ்மார்ட்போன் நாளை (ஜூலை 17) அறிமுகப்படுத்தப்படும் என்று ஷோமி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுமட்டுமல்லாமல் நாளை ரெட்மி கே20, ரெட்மி கே20 ப்ரோ ஆகிய ஸ்மார்ட்போன்களும் இந்தியாவில் வெளியாகின்றன. மீ ஏ3 ஸ்மார்ட்போன் போலந்து நாட்டில் அறிமுகப்படுத்தப்படும் என்று சில செய்திகள் வெளியாகின. இந்நிலையில், ஸ்பெயின் நாட்டில் நாளை மீ ஏ3 அறிமுகப்படுத்தப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மொபைலுடன் மீ ஏ3 லைட் என்ற கூடுதல் லைட் வெர்ஷன் மாடலும் நாளை அறிமுகப்படுத்தப்படும். மீ ஏ3 ஸ்மார்ட்போனின் அம்சங்கள் குறித்து கசிந்த தகவல்களின்படி, 6 அங்குல சூப்பர் ஆமோலெட் டாட் ட்ராப் தொடுதிரை இந்த ஸ்மார்ட்போனில் பொருத்தப்பட்டுள்ளது. in-screen fingerprint sensor போன்ற பிரீமியம் அம்சங்களும் மீ ஏ3 மொபைலில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா இதன் சிறப்பம்சமாகும்.

பின்புறத்தில் 48 மெகாபிக்சல், 8 மெகாபிக்சல், 2 மெகாபிக்சல் என மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஸ்னாப்ட்ராகன் 665 பிராசஸார், 4000mAh திறன் வாய்ந்த பேட்டரி உள்ளிட்டவை இந்த ஸ்மார்ட்போனின் ஹார்டுவேர் அம்சங்களாகும். மீ ஏ3 ஸ்மார்ட்போனுக்கு ரூ.17,000 ஆரம்பவிலையாக நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

**

மேலும் படிக்க

**

**[30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/07/16/18)**

**[ “மாற்று வேட்பாளரை மாற்றுங்கள்”- துரைமுருகனிடம் ஸ்டாலின்](https://minnambalam.com/k/2019/07/16/53)**

**[தயாராகிறது பாகுபலி 3?](https://minnambalam.com/k/2019/07/16/26)**

**[என் மகனாகப் பார்க்காதீர்கள்… ‘திமுக’காரனாகப் பாருங்கள்!](https://minnambalam.com/k/2019/07/16/27)**

**[அதிமுக தலைவராகிறாரா ரஜினி?](https://minnambalam.com/k/2019/07/15/18)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share