தெரு நாய்கள் காப்பகத்தின் இன்றைய நிலை குறித்து சென்னை மாநகராட்சி அறிக்கை அளிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் நேற்று (டிசம்பர் 14) உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள தெரு நாய்கள் காப்பகங்களை மிருகவதைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள விதிகளின்படி பராமரிக்க வேண்டுமென அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் உத்தரவிடக் கோரி, அல் மைட்டி விலங்குகள் நல அறக்கட்டளை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
நீதிபதிகள் சிவஞானம், ரவிச்சந்திரபாபு அடங்கிய அமர்வு முன்பு, இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
“தெரு நாய் தொல்லை தொடர்பாகப் புகார் வந்தால், மாநகராட்சி ஊழியர்கள் அவற்றைப் பிடித்து கருத்தடை செய்கின்றனர். அந்த நாய்களுக்கு ரேபிஸ் நோய் தடுப்பு மருந்து கொடுத்து, மீண்டும் கொண்டுவந்துவிட வேண்டும். ஆனால், சென்னையில் பேசின் பாலத்தில் உள்ள நாய்கள் காப்பகத்தில் நூற்றுக்கணக்கான நாய்கள் முறையாகப் பராமரிக்காமலும், உணவு அளிக்கப்படாமலும் அடைத்து வைக்கப்பட்டுள்ளன” என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து, சென்னை பேசின் பாலத்தில் அமைந்துள்ள நாய்கள் காப்பகத்தின் தற்போதைய நிலை தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யும்படி சென்னை மாநராட்சிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.�,