வறுமையொழிப்பைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, நாட்டில் வேலையின்மையே தலையாயப் பிரச்சனையாக பூதாகரமாக உருவெடுத்துள்ளது. 2001, 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்புகள் தரும் புள்ளிவிவரங்களை வைத்து, இந்தியாவின் எந்தந்த பகுதிகளில் எந்தெந்த துறைகளில் வேலைகள் உள்ளன என்பதை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.
விவசாயமற்ற மற்ற துறைகளில் உள்ள வேலைகளை (non-farm jobs) வழங்குவதில் நாட்டின் பல்வேறு பகுதிகளிடையே பெரும் வேறுபாடுகள் உள்ளன. விவசாயமற்ற மற்ற துறைகளில் அதிகளவில் வேலைகள் வழங்கும் மாவட்டங்கள் தென்மாநிலங்களிலும், மேற்கு மாநிலங்களிலுமே குவிந்துள்ளன. மேலும், ஏற்கனவே அதிகளவில் மற்ற துறைகளில் வேலை வழங்கும் மாவட்டங்களே 2001-2011 காலத்திலும் இதுபோன்ற வேலைகளின் எண்ணிக்கையைப் பெருக்கின. இதே காலத்தில், விவசாயமற்ற மற்ற துறைகளில் வேலைகளை உருவாக்குவதில் பின்தங்கியுள்ள மாவட்டங்களில் மிகச்சிறிய அளவிலேயே அந்த வேலைகளின் பங்கு அதிகரித்தது. இவை இந்தியாவின் வடக்கு, கிழக்கு மாநிலங்களில் குவிந்துள்ளன.
இந்தியாவின் தொழிற்துறை பெரிதளவிற்கு வளராததன் காரணமாகத்தான் விவசாயமற்ற மற்ற வேலைகளை உருவாக்குவதில் பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளது. நாட்டிலுள்ள 640 மாவட்டங்களில் வெறும் 26 மாவட்டங்களில் மட்டுமே மொத்த உழைப்புப் படையில் 20 விழுக்காட்டுக்கும் மேலானவர்கள் உற்பத்தித்துறையில் (manufacturing sector) வேலை செய்து வருவதாக மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 2011 தரும் விவரங்கள் நமக்கு தெரிவிக்கின்றன. ஓராண்டில் ஆறு மாதங்களுக்கு குறையாமல் தொழிற்சாலைகளில் வேலை செய்தவர்களின் பங்கு, 2001-2011 காலத்தில் பெரும்பான்மை மாவட்டங்களில் சரிவையே கண்டது என்பதும் தெரிய வருகிறது. அதனால், இன்றும் உழைப்புப் படையில் கிட்டத்தட்ட ஐம்பது விழுக்காட்டினருக்கு வேளாண் மற்றும் அது சார்ந்த துறைகளே வேலைகளை வழங்கும் நிலை நிலவுகிறது.
ஒரு பொருளாதாரம் வேகமாக வளரும்போது, தேசத்தின் மொத்த உற்பத்தியில் விவசாயத்தின் பங்கு குறைந்து நவீனத்தின் அடையாளமாகக் கருதப்படும் தொழிற்துறை மற்றும் சேவைத்துறையின் பங்கு அதிகரிக்கும். இந்த துறைசார்ந்த மாற்றம் ஏற்படும்போதே, உழைப்புப் படையில் பலர் விவசாயம் அல்லாத தொழில்களை நோக்கி செல்லத் தொடங்கிவிடுவார்கள் என்பதற்கு வரலாற்றில் போதிய சான்றுகள் உள்ளன. ஆனால், இந்தியாவின் உழைப்புப்படையில் 47 விழுக்காடு மக்கள், தேசத்தின் மொத்த உற்பத்தியில் வெறும் 18 விழுக்காடு பங்கைக் கொண்ட வேளாண்துறையில்தான் இருக்கிறார்கள். இத்துறையில் உற்பத்தித் திறனையும் வருமானத்தையும் பெருக்கி, தொழிலாளர்களை மற்ற துறைகளுக்கு மடைமாற்றம் செய்வதே இந்தியப் பொருளாதாரத்தை எதிர்நோக்கி இருக்கும் மிகப்பெரிய சவால்.
ஆக, துறைசார்ந்த மாற்றம் இந்தியாவில் முழுமையடையவில்லை என்பது இந்த புள்ளிவிவரங்களின் வழியே நமக்கு தெரிகிறது.
.
.
**
மேலும் படிக்க
**
.
.
**
[அமமுக தோல்விக்கான காரணங்கள்: அறிக்கை அனுப்பிய நிர்வாகிகள்!](https://minnambalam.com/k/2019/05/27/15)
**
.
**
[தலித்திய தனிமைப்படுதல் என்னும் அபாயம்!](https://minnambalam.com/k/2019/05/27/17)
**
.
**
[ரயில்வே இணையமைச்சர் ஆகிறார் ரவீந்திரநாத்?](https://minnambalam.com/k/2019/05/26/55)
**
.
**
[அதிமுகவில் ராஜ்யசபா ரேஸ்!](https://minnambalam.com/k/2019/05/26/52)
**
.
**
[வரப் போகும் நாட்கள் கடினமானவை: சோனியா](https://minnambalam.com/k/2019/05/27/18)
**
.
.�,”