பாஜக நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று (ஜூலை 16) டெல்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட அமைச்சர்களும், எம்.பிக்களும் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதி மீது உரிய கவனம் செலுத்தி புதுப்புது சிந்தனைகளை செயல்படுத்த வேண்டுமென்று அறிவுறுத்தினார். அவர் பேசுகையில், “நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகளுடன் இணைந்து குழுவாக செயல்பட வேண்டும். இந்த பருவத்தில் விலங்குகள் நோய்வாய்ப்பட அதிக வாய்ப்பிருப்பதால் விலங்குகள் நலனில் உறுப்பினர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
எம்.பிக்கள் முறையாக நாடாளுமன்றக் கூட்டங்களில் பங்கேற்று அவர்களது கடமைகளை சரியாக செய்ய வேண்டும். 2015ஆம் ஆண்டு வரை சமூகம் சார்ந்த விவகாரங்களில் அரசு அதிக கவனம் செலுத்தவுள்ளது. காசநோய், தொழுநோய், மாற்றுத்திறனாளிகள் போன்ற விவகாரங்களில் அதிக அக்கறை காட்ட வேண்டும்” என்று தெரிவித்தார். அண்மையில், பாஜக தலைவர் கைலாஷ் விஜயவர்கியாவின் மகனும், இந்தோர் எம்.எல்.ஏவுமான ஆகாஷ் விஜயவர்கியா அரசு அதிகாரி ஒருவரை கிரிக்கெட் பேட்டால் கடுமையாக தாக்கினார்.
இதை சுட்டிக்காட்டும் வகையில் பேசிய பிரதமர் மோடி, “கட்சியை வெற்றிப் பாதைக்கு கொண்டுவர தலைமுறை தலைமுறையாக பாஜக தலைவர்கள் கடுமையாக உழைத்துள்ளனர். திமிருடன் நடந்துகொள்வது கட்சிக்கு கெட்ட பெயரை உண்டாக்கும். யாருடைய மகனாக இருந்தாலும், தகாத நடவடிக்கைகளை பொறுத்துக்கொள்ள முடியாது” என்று தெரிவித்தார்.
தண்ணீர் பிரச்சினையை சரிசெய்ய உறுப்பினர்கள் பாடுபட வேண்டும். நாடாளுமன்றக் கூட்டங்களுக்கு முறையே வராமல் இருக்கும் எம்.பிக்களின் பட்டியலை அவ்வப்போது தன்னிடம் வழங்கும்படி நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு நரேந்திர மோடி அறிவுறுத்தினார்.
**
மேலும் படிக்க
**
**[30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/07/16/18)**
**[ நியூசிலாந்துக்கு ‘விதி’ செய்த ‘சதி’!](https://minnambalam.com/k/2019/07/15/46)**
**[தயாராகிறது பாகுபலி 3?](https://minnambalam.com/k/2019/07/16/26)**
**[டிஜிட்டல் திண்ணை: உதயநிதியை மாசெக்கள் தேடி வரவேண்டும்- அறிவாலயத்தின் மெசேஜ் !](https://minnambalam.com/k/2019/07/15/72)**
**[அதிமுக தலைவராகிறாரா ரஜினி?](https://minnambalam.com/k/2019/07/15/18)**
�,”