நாடாளுமன்றத் தேர்தல்: பிரச்சாரம் தொடங்கிவிட்டோம்!

public

மதுரையில் சைக்கிள் பேரணியைத் தொடங்கிவைத்துப் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தை மதுரையில் தொடங்கிவிட்டோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பொறுப்பேற்று கடந்த பிப்ரவரி மாதத்துடன் ஓராண்டு நிறைவடைந்தது. இதையடுத்து அதிமுகவின் புரட்சித் தலைவி அம்மா பேரவை சார்பில், எடப்பாடி அரசின் ஓராண்டு சாதனைகளை விளக்கும் வகையில் சைக்கிள் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மதுரை பாண்டி கோயிலில் நேற்று (ஜூலை 15) நடைபெற்ற விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சைக்கிள் பேரணியைத் தொடங்கி வைத்தார். இதில் துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், உதயகுமார், கடம்பூர் ராஜு, விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விழாவில் பேசிய முதல்வர் பழனிசாமி, “விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்கு முன்னோட்டமாக இந்த சைக்கிள் பேரணி பிரச்சாரம் அமைந்திருக்கிறது என்று நான் கருதுகிறேன். இதனை நாம் தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியாகவே எடுத்துக் கொள்ளலாம். நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தை நாம் மதுரையில் தொடங்கிவிட்டோம்” என்று குறிப்பிட்டார்.

“நான் முதல்வராகப் பொறுப்பேற்று இத்துடன் ஒரு வருடம் ஐந்து மாதங்கள் நிறைவடைந்துள்ளது. இதில் ஜெயலலிதா விட்டுச்சென்ற அனைத்துத் திட்டங்களையும் நிறைவேற்றியுள்ளோம். அனைத்துத் துறைகளும் வளர்ச்சியடைந்துள்ளது” என்று குறிப்பிட்ட முதல்வர், “பலர் கொல்லைபுறத்தின் வழியாக நுழைந்து ஆட்சியைக் கலைக்கவும் கட்சியை உடைக்கவும் திட்டமிட்டதாகவும், தற்போது அத்தனையும் தூள் தூளாக்கப்பட்டு ஆட்சி நிலையாகவும் கட்சி ஒருமித்தக் கருத்துடனும் செயல்படுகிறது” என்றும் தெரிவித்தார்.

தினகரன் குறித்துப் பேசிய முதல்வர், “தினகரன் அதிமுகவுக்காக என்ன தியாகம் செய்தார். கட்சியில் அவருடைய உழைப்பு என்ன? திமுகவைத் தீய சக்தி என்று எம்ஜிஆர் குறிப்பிட்டார். அந்தத் தீய சக்தியுடன் சேர்ந்துகொண்டு இரவு பகல் பாராமல் இந்த ஆட்சியைக் கவிழ்க்க நினைக்கிறார் தினகரன். ஆட்சியைக் கவிழ்க்க நினைக்கும் அவரை இந்த நாட்டு மக்கள் மன்னிப்பார்களா? தன்னுடைய உடல்நிலையைக்கூடப் பொருட்படுத்தாமல் சுற்றுப்பயணம் செய்து ஜெயலலிதா கொண்டுவந்த ஆட்சியைக் கவிழ்க்க நினைக்கும் துரோகி தினகரன்” என்று விமர்சனம் செய்தார்.

“பல ஆண்டுகளாக நீடித்துவந்த காவிரிப் பிரச்சினைக்கு தமிழக அரசு நீதி வாங்கித் தந்துள்ளது. தற்போது கர்நாடக அணைகளில் நீரைத் தேக்க முடியாமல், ஒரு லட்சம் கனஅடி வரை தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. நாம் கேட்காமலேயே தண்ணீரைத் திறந்து வைத்துள்ளனர். தமிழகத்திலுள்ள அனைத்து அணைகளும் நிரம்பி வருகின்றன” என்று குறிப்பிட்ட முதல்வர், இதன்மூலம் வரும் நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்கு இயற்கை நமக்குக் கைகொடுக்கிறது என்றும் பேசினார்.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0