[நாங்கள் விளையாட மட்டுமே வரவில்லை!

Published On:

| By Balaji

இந்தியத் தொடர் குறித்து மனம் திறந்துள்ளார் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் நிக் போத்தாஸ்.

இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையே தற்போது ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் நடந்துவருகிறது. இதன் முதல் ஆட்டத்தில் இந்தியா வெல்ல , இரண்டாவது ஆட்டம் எந்த அணிக்கும் வெற்றியோ தோல்வியோ இல்லாமல் டையில் முடிந்தது. மூன்றாவது ஆட்டத்தில் வீறுகொண்ட மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியப் பந்து வீச்சை துவம்சம் செய்து வெற்றிபெற்றது.

ஆனால் நான்காவது போட்டியிலோ எல்லாவற்றுக்கும் சேர்த்துவைத்து ருத்ரதாண்டவம் ஆடிய இந்திய அணி பேட்டிங் பந்துவீச்சு என இரண்டிலுமே மேற்கிந்திய தீவுகளை எளிதாக ஊதித் தள்ளியது. இந்நிலையில் ஐந்தாவது மற்றும் இறுதிப் போட்டி இன்று (நவம்பர் 1) திருவனந்தபுரத்தில் நடக்கிறது.

இந்நிலையில் இந்தத் தொடர் குறித்து மனம் திறந்துள்ளார் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளரான நிக் போத்தாஸ். திருவனந்தபுரத்தில் நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர், “இந்தத் தொடரைப் பொறுத்தவரை இந்தியாவுக்கு எதிராக விளையாட மட்டும் இங்கு வரவில்லை. இந்தியாவிடமிருந்து கற்றுக்கொள்ளவும்தான் இங்கு வந்திருக்கிறோம். இந்தியா போன்ற மிகச் சிறந்த அணிக்கு எதிராக விளையாடும்போது நிறையவே கற்றுக்கொள்ளலாம். இந்தியா போன்ற தலை சிறந்த அணிக்கு எதிராக விளையாடும் வாய்ப்பு அமைந்தது சிறப்பானது. 50 ஓவர் கிரிக்கெட்டில் இப்போதுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி மிகவும் இளமையான அணி. எனவே அவர்கள் சர்வதேசத் தரத்தினையடைய நிறையவே கற்றுவருகிறார்கள். அது மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment