நல்லவனை பிரெண்டு சும்மாவே சோதிப்பான்: அப்டேட் குமாரு!

Published On:

| By Balaji

நாட்ல பல கோடி பணம் ஜெயச்சவன், சம்பாதிச்சவன்லாம் சைலண்டா இருக்கான். ஆனா, ஒரு நாலனா கடன் வாங்கிட்டு இவங்களுக்குத் தெரியாம சுத்தி வீட்டுக்குப் போறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுது. ஆனா, இதுதான் சாக்குன்னு நம்மளையும் கூட்டிட்டுப்போய் போலீஸ்ல மாட்டி விடுற பிரெண்ட் இருக்குற வரைக்கும் நாம கவலைப்படப்வேண்டிய அவசியமே இல்லை. நீங்க அப்டேட்டைப் படிங்க. நான் எதுக்கும் எக்ஸ்ட்ராவா கொஞ்சம் இடம் ரெடி பண்ணிடுறேன்.

**Major K Surya**

இன்னிக்கி சிகா மார்க்கெட்டுக்கு ராஜேஷ் டொக்கு டைரக்டரா தோணலாம்… வவாச டைம்ல எம் ராஜேஷ் வசனத்தில்”னுலாம் போஸ்டர்ல அழுத்தி அழுத்தி போட்டு யாவாரம் பண்ணிருந்தாங்க

**Shanthosh**

மூனு புடவை எடுக்க வந்தோம், ஒரு புடவை வாங்க இரண்டு மணி நேரமா 40+ புடவைகளை பிரிச்சி போட்டு ஆராய்ச்சி பண்ணிகிட்டிருக்காங்க.

**கோழியின் கிறுக்கல்!!**

நினைப்பதை பகிர்வதற்கான தயக்கம் பெண்ணுக்கும் ஆணுக்கும் சரிசமமாக இருக்கிறது என்ற நிதர்சனத்தை தெளிய வைத்தது!!!

**மெத்த வீட்டான்**

நான் சட்டமன்றத்தில் கூட சட்டையை கிழித்து கொள்ள மாட்டேன் – கமல்

ஆமா ,எதுவும் பிரச்சினை வந்தால் நாட்டை விட்டே ஓடிருவாரு !

**ரஹீம் கஸ்ஸாலி**

`பா.ஜ.கவை தமிழகத்துக்கு அடையாளம் காட்டியவர் ஜெயலலிதா!’- கே.பி.முனுசாமி

அந்த நன்றிக்கடனுக்குத்தான் இப்ப அதிமுகவை பிஜேபியினர் வச்சு செய்றாங்க.

**செந்திலின்_கிறுக்கல்கள்**

வீட்டிற்கு ‘டன்’ கணக்கில் கம்பி வாங்குகிறார்களோ இல்லையோ வீட்டை கட்டி முடிக்க கண்டிப்பாக க’டன்’ வாங்குகிறார்கள்!

**உள்ளூராட்டக்காரன்**

நவநாகரீக சுயசேவை துணிக்கடைக்களில், 38 இன்ச் சைஸ் பேண்ட்டை எல்லாம் கீழ் அடுக்குகளில் வச்சிருக்காங்க…

அந்த சைஸ் போடுறவன் எப்படி குனிஞ்சி எடுப்பான்ங்கிற அடிப்படை அறிவு கூட இல்லாம…

**அஜ்மல் அரசை**

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதில்லை, சட்டமன்ற தேர்தல் தான் இலக்கு, நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை – ரஜினிகாந்த்

இந்த சின்னத்துக்கு ஒரு குத்து.

அந்த சின்னத்துக்கு ஒரு குத்து.

ஆக மொத்தத்துல இது செல்லாத ஓட்டு.

**amudu**

“கேர் டை” விளம்பரத்தை, பேப்பரில் பார்த்திருப்ப, டிவியில் பார்த்திருப்ப, ஏன், மொபைலில் கூட பார்த்திருப்ப. ஆனால்,நீ டை அடிச்சதை, உன் மனைவி பக்கத்து வீட்டில் விளம்பரம் பண்ணி நீ பார்த்திருக்கியா?உங்க பக்கத்து வீட்டிற்கு, சுமாரா ஒரு ஃபிகர் குடி வந்தால் போதும். அப்போ இதை நீ பார்ப்பா.

**செந்திலின்_கிறுக்கல்கள்**

அறிவை வளர்க்க கல்லூரி சென்றவனுக்கு அரியரை மட்டுமே வளர்த்தது அவளின் ஓரப்பார்வை!

**வெண்பா**

எங்க இருக்கேனு கேட்பவர்க்கு “ஆன் லைனில்” இருக்கிறேன் என்பதுதான் பொருத்தமான பதில்

**எனக்கொரு டவுட்டு **

`பா.ஜ.கவை தமிழகத்துக்கு அடையாளம் காட்டியவர் ஜெயலலிதா!’ – கே.பி.முனுசாமி

அப்போ நாங்க யாரு – நோட்டா..!

-லாக் ஆஃப்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share