நாட்டின் 15ஆவது பிரதமராக நரேந்திர மோடி நேற்று மீண்டும் பொறுப்பேற்றார்.
17ஆவது மக்களவையைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுத் தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை ஏழு கட்டங்களாக நடந்தது. இந்தத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 303 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. இரண்டாவது முறையாக நரேந்திர மோடி நேற்று (மே 30) பிரதமராகப் பொறுப்பேற்றார். டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி முதலில் பதவியேற்க, அவரைத் தொடர்ந்து 57 அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இவர்களுக்குப் பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
கிர்கிஷ் ஜனாதிபதி ஜீன்பெகோவ், மொரிசியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜுக்னவுத், வங்கதேச ஜனாதிபதி அப்துல் ஹமீது, இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா, நேபாள பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி, பூட்டான் பிரதமர் லோட்டாய் ஹெரிங், மியான்மர் அதிபர் யு வின் மியிண்ட், தாய்லாந்தின் சிறப்பு தூதர் கிரிசடா பூன்ராச் உள்ளிட்ட வெளிநாட்டு தலைவர்களும், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இவர்களுக்கு முதல் வரிசை இருக்கை ஒதுக்கப்பட்டது.
தமிழக அரசின் சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார் போன்றோரும், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். ஒட்டுமொத்தமாக 8,000 பேர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். கேபினட் அமைச்சர்களாக 25 பேரும், தனி அமைச்சர்களாக 9 பேரும், இணையமைச்சர்களாக 24 பேரும் பதவியேற்றுக்கொண்டனர்.
பாஜக தேசியத் தலைவரான அமித் ஷா கேபினட் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார். இதனால் பாஜகவின் அடுத்த தேசியத் தலைவராக சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த ஜேபி.நட்டா நியமிக்கப்படுவார் என பாஜக வட்டாரங்களில் சொல்லப்படுகிறது. உடல்நலக் குறைவு காரணமாக நிதியமைச்சராக இருந்த அருண் ஜேட்லிக்கு இம்முறை அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. அதேபோல வேளாண் துறை அமைச்சராக இருந்த ராதாமோகன் சிங், பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த மேனகா காந்தி, சுஷ்மா சுவராஜ், வர்த்தகத் துறை அமைச்சராக இருந்த சுரேஷ் பிரபு, தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சராக இருந்த ராஜ்யவர்தன் ரதோர், விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா ஆகியோருக்கு இம்முறை அமைச்சர் பதவி ஒதுக்கப்படவில்லை.
ஒட்டுமொத்தமாக 22 மாநிலங்களிலிருந்து அமைச்சர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேசத்தில் 9 பேரும், மகாராஷ்டிராவில் 8 பேரும், பிகாரில் 5 பேரும், கர்நாடகாவில் 4 பேரும், ராஜஸ்தான், குஜராத், ஹரியானா ஆகிய மாநிலங்களில் தலா 3 பேரும், மேற்கு வங்கம், பஞ்சாப், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் தலா 2 பேரும், அசாம், அருணாசலப் பிரதேசம், சத்தீஷ்கர், டெல்லி, கோவா, இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர், ஒடிசா, தெலங்கானா, உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் இருந்து தலா ஒருவரும் அமைச்சர்களாக பதவி ஏற்றனர்.
58 பேரில் 6 பேர் பெண்கள். அதில் நிர்மலா சீதாராமன், ஹர்சிம்ரத் பாதல், ஸ்மிருதி இரானி உள்ளிட்ட 3 பேர் கேபினட் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். தவார்சந்த் கெஹ்லாட், ராம்தாஸ் அத்வாலே, ராம்விலாஸ் பஸ்வான், ரத்தன்லால் கட்டாரியா, சாத்வி நிரஞ்சன் ஜோதி உள்ளிட்ட தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.
**கேபினட் அமைச்சர்கள்**
1. நரேந்திர மோடி
2. ராஜ்நாத் சிங்
3. அமித் ஷா
4. நிதின் கட்கரி
5. சதானந்த கவுடா
6. நிர்மலா சீதாராமன்
7. ராம்விலாஸ் பஸ்வான்
8. நரேந்திரசிங் தோமர்
9. ரவிசங்கர் பிரசாத்
10. ஹர்சிம்ரத் பாதல்
11. தவார்சந்த் கெஹ்லாட்
12. சுப்பிரமணியம் ஜெய்சங்கர்
13. ரமேஷ் போஹ்ரியால்
14. அர்ஜுன் முண்டா
15. ஸ்மிருதி இரானி
16. ஹர்ஷ்வர்தன்
17. பிரகாஷ் ஜவடேகர்
18. பியூஷ் கோயல்
19. தர்மேந்திர பிரதான்
20. முக்தர் அப்பாஸ் நக்வி
21. பிரகலாத் ஜோஷி
22. மகேந்திரநாத் பாண்டே
23. அர்விந்த் கண்பத் சவாந்த்
24. கிரிராஜ் சிங்
25. கஜேந்திரசிங் ஷெகாவத்
**அமைச்சர்கள் (தனிப்பொறுப்பு)**
1.சந்தோஷ்குமார் கெங்வார்
2. ராவ் இந்தர்ஜித் சிங்
3. ஸ்ரீபாட் யசோ நாயக்
4. ஜிதேந்திர சிங்
5. கிரண் ரிஜிஜூ
6. பிரகலாத் சிங் படேல்
7. ராஜ்குமார் சிங்
8. ஹர்தீப் சிங் புரி
9. மன்சுக் எல். மாண்ட்வியா
**இணையமைச்சர்கள் **
1. ஃபாகன்சிங் குலாஸ்தே
2. அஷ்வினிகுமார் சௌபே
3. அர்ஜூன்ராம் மெஹ்வால்
4. வி.கே.சிங்
5. கிருஷ்ணன் பால்
6. தான்வே தாதாராவ்
7. கிஷன் ரெட்டி
8. புருஷோத்தம் ராம்பாலா
9. ராம்தாஸ் அத்வாலே
10. சாத்வி நிரஞ்சன் ஜோதி
11. பபுல் சுப்ரியோ
12. சஞ்சீவ்குமார் பல்யான்
13. சஞ்சய் ஷாம்ராவ் தோத்ரே
14. அனுராக்சிங் தாகுர்
15. சுரேஷ் சன்னப்பசப்ப அங்கடி
16. நித்யானந்த் ராய்
17. ரத்தன்லால் கட்டாரியா
18. வி.முரளீதரன்
19. ரேணுகாசிங் சாருதா
20. சோம் பர்காஷ்
21. ரமேஷ்வர் டெலி
22. பிரதாப் சந்திர சாரங்கி
23. கைலாஷ் சௌத்ரி
24. தேபஸ்ரீ சௌத்ரி
.
.
**
மேலும் படிக்க
**
.
.
**
[மத்திய அமைச்சர்: ஓபிஎஸ் மகனுக்கு எடப்பாடி கடும் எதிர்ப்பு!](https://minnambalam.com/k/2019/05/30/80)
**
.
**
[டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்கு இளைஞரணி: ஸ்டாலினுக்கு நெருக்கடி!](https://minnambalam.com/k/2019/05/30/79)
**
.
**
[முதல்வர் மாவட்டத்தில் ஆர்எஸ்எஸ் பயிற்சி வகுப்பு: முழு ரிப்போர்ட்!](https://minnambalam.com/k/2019/05/30/18)
**
.
**
[என்ன செய்திருந்தால் ராகுல் வென்றிருப்பார்!?](https://minnambalam.com/k/2019/05/30/23)
**
.
**
[காங்கிரஸ் தலைவராக தலித்?](https://minnambalam.com/k/2019/05/30/53)
**
.
.
�,”