சபாநாயகர் மீது கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்த கேள்விக்குப் பொறுத்திருந்து பாருங்கள் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலோடு, தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும், மே 19ஆம் தேதி 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இடைத்தேர்தலில் 22 தொகுதிகளில் 13ல் திமுக வென்றது. மீதமுள்ள 9 சட்டமன்றத் தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்று, ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது. இதனால் ஆட்சி மாற்றம் ஏற்படவில்லை. இதையடுத்து தமிழகச் சட்டமன்றத்தில் திமுக கூட்டணிக் கட்சிகளின் உறுப்பினர்களையும் சேர்த்து மொத்தம் 109 பேர் இருக்கிறார்கள். இதற்கிடையே புதிதாகத் தேர்வாகியுள்ள 22 சட்டமன்ற உறுப்பினர்களின் பெயர்களும், தமிழக அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டது. அதன்படி திமுக சார்பில் வெற்றி பெற்ற ஓட்டப்பிடாரம் சண்முகையா, திருப்பரங்குன்றம் டாக்டர் சரவணன், அரவக்குறிச்சி செந்தில் பாலாஜி, திருவாரூர் பூண்டி கலைவாணன், தஞ்சை நீலமேகம், ஓசூர் எஸ்.ஏ.சத்யா, ஆம்பூர் வில்வநாதன், குடியாத்தம் காத்தவராயன், பெரியகுளம் சரவணகுமார், ஆண்டிபட்டி மகாராஜன், பூந்தமல்லி கிருஷ்ணசாமி, பெரம்பூர் சேகர், திருப்போரூர் இதயவர்மன் உள்ளிட்டோர் பெயர்களும் இடம் பெற்றிருந்தன.
இந்நிலையில், இவர்கள் 13 பேரும் இன்று (மே 28) பதவி ஏற்றுக் கொண்டனர். எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், சபாநாயகர் தனபால் அறையில் பதவியேற்றனர்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்டாலின், நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து சட்டமன்றம் கூடும்போது, ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் பொறுத்திருந்து பாருங்கள் என்று தெரிவித்தார். அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களான அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி பிரபு ஆகியோருக்கு கடந்த ஏப்ரல் மாதம் நோட்டீஸ் அனுப்பப்பட்டதை தொடர்ந்து, சபாநாயகர் தனபாலுக்கு எதிராக திமுக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
.
.
**
மேலும் படிக்க
**
.
.
.
**
[டிஜிட்டல் திண்ணை: எம்.எல்.ஏ.க்களா, தொண்டர்களா? முடிவுக்கு வந்த ஸ்டாலின்](https://minnambalam.com/k/2019/05/27/68)
**
.
**
[திமுக: ராஜ்ய சபாவுக்குச் செல்பவர்கள் யார்?](https://minnambalam.com/k/2019/05/28/29)
**
.
**
[தேர்தல் முடிவு: சசிகலா ரியாக்ஷன்!](https://minnambalam.com/k/2019/05/28/27)
**
.
**
[ரயில்வே இணையமைச்சர் ஆகிறார் ரவீந்திரநாத்?](https://minnambalam.com/k/2019/05/26/55)
**
.
**
[தலித்திய தனிமைப்படுதல் என்னும் அபாயம்!](https://minnambalam.com/k/2019/05/27/17)
**
.
.�,”