நமக்குள் ஒருத்தி: உணர்வுகளும் உறக்கம் களையட்டும்!

public

நவீனா

பெண்களுக்கு அவர்கள் செய்ய வேண்டியவை, வேண்டாதவைகளைப் பட்டியலிடுவது சமூகத்தின் வேலை என்று பெண்களை ஏற்றுக்கொள்ள வைத்ததே ஆணாதிக்கச் சமூகத்தின் முதல் நிலை வெற்றி என்று சொல்ல வேண்டும். தான் யார், தனக்கு என்ன தேவை, தன்னால் என்னவெல்லாம் செய்ய முடியும், முடியாது என்கிற தன்னைப் பற்றிய புரிதல் பெண் விடுதலைக்கு மிகவும் அவசியமானதாகும்.

உதாரணமாக, ஒரு பெண்ணுக்கு சேலை மிகவும் பிடித்தமான உடை என்று வைத்துக்கொள்வோம். தனக்குப் பிடித்த அந்த உடையைப் பற்றி அவள் முழுமையாக அறிந்திருக்க வேண்டும். அதனை உடுத்திக்கொள்ள எடுக்கும் கால அளவைக்கூட அவள் கணித்து வைத்திருக்க வேண்டும். ஒரு காட்டன் புடவையை அவள் பத்து நிமிடங்களில் உடுத்தவும், ஒரு சிந்தடிக் புடவையை ஐந்து நிமிடங்களில் உடுத்தவும் முடியும் என்று அவள் அறிந்திருப்பாளேயானால், சாதாரண நேரங்களிலும் அவசர காலங்களிலும் எதை, எப்போது உடுத்துவது என்று முடிவு செய்யும் தெளிவு அவளிடம் வந்துவிடும்.

இது போன்ற சிறு சிறு விஷயங்களில் அக்கறை கொள்ளும்போது ஒரு பெண்ணின் நுண்ணறிவு வளர்கிறது. அதுவே பின்னாளில் அவள் சார்ந்த மற்றும் சமூகம் சார்ந்த முடிவுகளை அவளே தன்னிச்சையாக எடுக்கும் ஆற்றலை வளர்க்கிறது.

நுண்ணறிவின் முக்கியத்துவம்

இந்த நுண்ணறிவு குறைபட்டுப்போனதால்தான், இன்று பெண்கள், சமூகம் சொல்லும் அனைத்தையும் எளிதில் நம்பிவிடுகின்றனர். ஆகஸ்ட் முதல் வாரம் உலக தாய்ப்பால் வாரமாக அறிவிக்கப்பட்டு, உலகம் முழுவதும் சமீபத்தில் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி பல பெண்களும் ஆண்களும் அவர்களின் முகநூல் பக்கங்களைத் தாய்ப்பாலூட்டும் தாயும் சேயும் இருக்கும் புகைப்படங்களுடன் கூடிய வாழ்த்துகளால் நிறைத்துக்கொண்டிருந்தனர். ஆனால், நுண்ணறிவு வளர்ச்சி அடைந்த ஒரு பெண்ணால் நிச்சயமாக கோபமும் ஆச்சரியமும் கலந்த மனநிலையோடுதான் இதை எதிர்கொண்டிருக்க முடியும்.

முதலில் தாய்ப்பாலூட்டலுக்கு விழிப்புணர்வு தேவை என்கிற நிலையே பெண்மைக்கு ஒரு இழுக்குதான். தாய்ப்பாலூட்டல் என்பது அடிப்படையில் ஒரு பழக்கம் அல்லது பண்பு என்பதையெல்லாம் மீறி அது ஓர் உணர்ச்சி என்பதை பெண்களின் புத்தியில் இருந்து மழுங்கடிக்கவே தற்காலச் சமூகமும் ஊடகங்களும் முயல்கின்றன என்றே சொல்ல வேண்டும். இப்படியே போனால் மரத்தமிழச்சிகளுக்குத் தாய்ப்பாலூட்டுவதற்கு வருங்காலங்களில் வகுப்புகள் எடுக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

குழந்தை அழுதால் அதற்குப் பாலூட்ட வேண்டும் என்பது பெண்களுக்கே உரிய இயல்பானதொரு செயல்பாடு. கிராமப்புறங்களில் காட்டு வேலைக்குப் போகும் பெண்கள், ஏதேனும் ஒரு பெரிய மரக்கிளையில் தொட்டில் கட்டி அதில் குழந்தையை உறங்க வைத்துவிட்டுச் சற்றுத் தொலைவில் வேலை பார்த்துக்கொண்டிருப்பார்கள். பசியால் குழந்தை அழும் சத்தத்தைக் கேட்கும் தொலைவில் அவர்கள் இல்லாவிட்டாலும் குழந்தை அழும்போது அவர்களை அறியாமலேயே மார்பில் தானே பால் சுரந்து வழியும். அதைப் பார்த்துவிட்டு, குழந்தை பசியால் அழுகிறது என்றறிந்து ஓடி வந்து குழந்தையைத் தூக்கிப் பாலூட்டுவார்கள். குழந்தை பசியமர்ந்ததைப் பார்த்து அதனை உச்சி முகர்ந்து முத்தமிடுவார்கள்.

தாய்ப்பால் என்பது குழந்தைக்கான ஓர் உணவு மட்டுலல்ல அது தாய்மையின் சிறப்பைப் பாராட்டும் அம்மாவுக்கும் குழந்தைக்குமானதொரு பந்தம். அது இயல்பாகவே உருவாக வேண்டிய ஓர் உணர்வு. பசி, தூக்கம், அழுகை, சிரிப்பு போல முற்றிலும் அனிச்சையானது.

தாய் என்னும் கண்ணாடி பிம்பம்

ஜாக் லக்கான் தனது ‘மிர்ரர் ஸ்டேஜ்’ என்னும் கோட்பாட்டில் தாய்க்கும் குழந்தைக்குமான உறவை மிக நேர்த்தியாக விளக்கியிருப்பார். அவரின் கூற்றுப்படி, ஒரு குழந்தை, அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, முதன்முதலில் பார்க்கும் தனது தாயின் முக உருவத்தையே தனது சொந்த உருவமென எண்ணி தன் மனதில் வரித்துக்கொள்கிறது. பின்னாளில் அது கண்ணாடியில் தன் நிஜ உருவத்தைப் பார்க்கும்போதுதான் தனக்கென்று ஒரு தனி உருவம் இருப்பதையே உணர்கிறது. பெரும்பாலும் இது குழந்தை நடை பயிலும் காலத்தில்தான் நிகழ்கிறது. அத்தனை நாள் வரை தாயன்பைத் தவிர ஒரு குழந்தைக்கு வேறு எதுவுமே தெரியாது.

தனது தாயின் உருவமே தான் என நினைக்கும் அந்தக் குழந்தை தாய்ப்பாலில்தான் உயிர்பிடித்து வளர்கிறது. இது உள்ளூர நிகழும் ஓர் ஆத்மார்த்தமான உணர்வு. இதைக்கூட வணிகமாக்கப் பெண்கள் அனுமதித்தால் அவர்களைச் சுற்றி நடக்கும் எந்த அநியாயமும் அவர்களுக்கு நியாயமாகப்படும் என்றே கொள்ள வேண்டும். இந்த உணர்ச்சியைக்கூட விளம்பரமாக்கப் பெண்கள் தயாரானால் கூடிய விரைவில் தாய்ப்பால் ‘டெட்ரா பேக்கிங்’கில் விற்பனைக்கு வந்துவிடும்.

பெண்கள் தங்கள் சுயத்தை உணர்ந்து, நல்லது கெட்டதைப் பகுத்தறியத் தெரிந்துகொண்டாலொழிய இது போன்ற பிரச்சினைகள் வரிசையில் ஊறும் எறும்புகள் போல் படையெடுத்துக் கொண்டுதான் இருக்கும்.

இன்னும் பறக்கலாம்!

(தொடரின் அடுத்த பகுதி வரும் வெள்ளியன்று வெளியாகும் – ஆசிரியர்)

(**கட்டுரையாளர்:** நவீனா, ஆங்கிலப் பேராசிரியர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர். சமூகப் பிரச்சினைகள், பெண்ணியம், இலக்கியம் சார்ந்த படைப்புகளை எழுதிவருகிறார். அவரைத் தொடர்புகொள்ள: writernaveena@gmail.com)

[தொடரின் முதல் பகுதி]( https://minnambalam.com/k/2018/09/16/34)

[இரண்டாம் பகுதி]( http://minnambalam.com/k/2018/09/17/19)

[மூன்றாம் பகுதி]( https://minnambalam.com/k/2018/09/21/20)

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

மின்னம்பலம் தமிழின் டிஜிட்டல் தினசரி இதழ் எந்தவித விருப்பு வெறுப்புகளுக்கும் இடம் கொடுக்காமல், ஊடக அறத்தின் துணை கொண்டு ஜனநாயகப் பயணம் மேற்கொண்டிருப்பதைத் தாங்கள் அறிவீர்கள்.

சாமானிய மக்களின் நலனுக்காக, ஒட்டுமொத்த நாட்டு நலனுக்காக மின்னம்பலம் வெளியிடும் செய்திகள், கட்டுரைகள், புலனாய்வுகளுக்குப் பின்னணியில் பலத்த உழைப்பும் நேர்மையும் இருக்கிறது. மின்னம்பலத்தின் இந்தச் சீரிய பயணம் பொருளாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்படாமல் இருக்க வாசகர்களின் ஆதரவைக் கோருகிறோம்.

மின்னம்பலத்தை நேசிக்கும் வாசகர்கள் சந்தா செலுத்துவது, நன்கொடை வழங்குவது போன்றவற்றின் மூலமாக எங்களுக்கு உதவலாம்.

மின்னம்பலத்துக்கு ஆதரவளியுங்கள், தோள் கொடுங்கள். தொடர்ந்து பயணிப்போம்!

**சந்தா கட்டணத்தை உங்கள் (ஆண்ட்ராய்டு / ஐபோன்) செல்போனிலிருந்தே செலுத்துவதற்கான எளிய வழிமுறைகள் இதோ…**

1. பின்வரும் ஏதாவது ஒரு UPI செயலியை (ஆப்) உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்யவும். அதன்பின் அந்தச் செயலியில் உள்ள உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியைக் (Virtual Private Address) குறித்துக் கொள்ளுங்கள்.

**பீம் (BHIM) [Android](https://play.google.com/store/apps/details?id=in.org.npci.upiapp) / [IOS](https://itunes.apple.com/in/app/bhim-making-india-cashless/id1200315258?mt=8)**

**டெஸ் (TEZ) [Android]( https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.nbu.paisa.user) / [IOS](https://itunes.apple.com/in/app/tez-a-payments-app-by-google/id1193357041?mt=8)**

**போன்பே (PhonePe) [Android](https://play.google.com/store/apps/details?id=com.phonepe.app) / [IOS](https://itunes.apple.com/in/app/phonepe-indias-payments-app/id1170055821?mt=8)**

**பேடிஎம் (Paytm) [Android](https://play.google.com/store/apps/details?id=net.one97.paytm) / [IOS](https://itunes.apple.com/in/app/paytm-payments-bank-account/id473941634?mt=8)**

2. பின்னர் கீழே உள்ள என்.மின்னம்பலம் வலைப் பக்கத்தை க்ளிக் செய்யுங்கள். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பதிவு செய்து, நீங்கள் விரும்பும் சந்தா தொகையைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியை அதற்கான இடத்தில் உள்ளிட்டு, தொகையைச் செலுத்தலாம்.

**[en.minnambalam.com/subscribe.html](https://en.minnambalam.com/subscribe.html)**

3. மீண்டும் உங்கள் செயலிக்குச் சென்று பணப் பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளிக்கவும்.

.

**சந்தேகங்கள் இருப்பின் தொடர்பு கொள்ள வாட்ஸ் அப் எண் +91 6380977477**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *