பெங்களூருவில் 330 பயணிகளுடன் சென்ற இரு இண்டிகோ விமானங்களுக்கிடையே நடைபெற இருந்த விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
ஜூலை 10ஆம் தேதி இண்டிகோ விமானத்தில் கோவையிலிருந்து ஹைதராபாத்துக்கு 162 பயணிகள் பயணம் செய்தனர். அதேபோல, பெங்களூருவிலிருந்து இண்டிகோ விமானத்தின் மூலம் 166 பயணிகள் கொச்சிக்கு சென்று கொண்டிருந்தனர்.
எதிர்பாராதவிதமாக இரு விமானங்களும் வானில் மிக நெருக்கமாக எதிர் எதிராக மோதிக்கொள்வதுபோல வந்தன. போக்குவரத்து மோதல் தவிர்ப்பு அமைப்பின் எச்சரிக்கை அலாரம் அடித்ததால்மோதிக்கொள்ளாமல் விபத்து தவிர்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இண்டிகோ விமான நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் இச்சம்பவத்தை உறுதிபடுத்தியுள்ளார். இதுகுறித்து அவர்கூறுகையில், இந்த இரண்டு விமானங்களுக்கிடையே 200 அடி இடைவெளி இருந்தது உண்மைதான். ஜூலை 10ஆம் தேதி நடந்த இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது. இதில் எங்கள் தவறு ஏதுமில்லை என்பதைக் கூறியுள்ளோம்.
வான்வழிப் போக்குவரத்து விபத்துத் தவிர்ப்பு அமைப்பின் வழிகாட்டல்படியே கோவையிலிருந்து ஹைதராபாத் மற்றும் பெங்களூருவிலிருந்து கொச்சின் தடங்களில் எங்கள் இரு விமானங்களும் சரியான நேரங்களில் இயக்கப்பட்டன.
வழக்கமாக கடைபிடிக்கப்படும் தொழில்நுட்ப நடைமுறையைத் தொடர்ந்து விமானம் புறப்படுவது குறித்து ரெகுலேட்டருக்கும் தகவல் தரப்பட்டது. அதன்பிறகே விமானம் இயக்கப்பட்டது. ஆனால் வானில் இரு விமானங்களும் மோதல் ஏற்படும் நிலைக்கு நெருங்கி பறந்தததற்கான காரணம் புரியவில்லை” என்றார்.
இதேபோன்ற சம்பவம், கடந்த ஜனவரி மாதம் இந்திரா காந்தி இன்டர்நேஷனல் (ஐ.ஜி.ஐ.) விமான நிலையத்தில் வெவ்வேறுஓடுபாதைகளில் இறங்கிய இரு விமானங்கள் நேருக்கு நேர் சந்தித்துள்ளது.
மேலும், இதுபோன்று கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், ஐஜிபி விமான நிலையத்தில் இரண்டு விமானங்கள்மோதிக்கொண்டன. அந்த விபத்தில், இண்டிகோ விமானமும் ஸ்பைஸ்ஜெட் விமானமும் ஒரு பெரிய விபத்துக்குள்ளானது குறிப்பிட்டத்தக்கது.
�,