நடுரோட்டில் நெல்லை கொட்டி விவசாயிகள் போராட்டம்!

Published On:

| By admin

ஈரோடு மாவட்டம், ஊஞ்சலூர் அருகே ஈரோடு-கரூர் சாலையில் சோழங்காபாளையம் நால்ரோடில் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் சாலையில் நெல்லை கொட்டி மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த ஒரு மாத காலமாக ஈரோடு மாவட்டத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில் இதை வலியுறுத்தி சோழங்கபாளையம் நால்ரோடு சாலையில் நெல்லை கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்த மலையம்பாளையம் போலீஸார் மற்றும் கொடுமுடி மண்டல துணை வட்டாட்சியர் பரமசிவம் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது எடக்காடு நெல் கொள்முதல் நிலையத்தை வருகிற 15ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்ற அதிகாரிகள் உறுதியளித்தனர். இதைத் தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

**-ராஜ்**

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share