^நடிப்பு பக்கம் திரும்பிய எடிட்டர்!

public

படத்தொகுப்பாளராகப் பல படங்களில் பணியாற்றிய டான் போஸ்கோ தற்போது நடிகராக அறிமுகமாகவுள்ளார்.

சைக்கோ த்ரில்லர் பாணியில் உருவாகும் படம் உத்தரவு மகாராஜா. ஆஸிப் குரேஷி இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் உதயா கதாநாயகனாக நடிக்கிறார். பிரியங்கா, நிஷா, சேரா என மூன்று கதாநாயகிகள் நடிக்கின்றனர். பிரபு, நாசர், மனோ பாலா, ஸ்ரீமன் இணைந்து நடிக்கின்றனர். தற்போது இந்தப் படத்தில் படத்தொகுப்பாளர் டான் போஸ்கோ நடிகராக அறிமுகமாகிறார்.

இயக்குநர் ஆஸிப்பின் நெருங்கிய நண்பரான டான் போஸ்கோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மூன்று கதாநாயகிகளில் ஒருவருக்கு சகோதரராக நடிப்பதோடு இந்த கதாபாத்திரம் கிளைமேக்ஸ் காட்சியில் முக்கிய பங்கு வகிப்பதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு படத்தொகுப்புப் பணிகளையும் மேற்கொண்டுவரும் டான் போஸ்கோ அதன் 80 சதவிகித பணிகளை முடித்துள்ளார். தொடர்ந்து தான் இயக்கும் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார்.

சுந்தரபாண்டியன், இது கதிர்வேலன் காதல் உள்ளிட்ட பல படங்களின் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ள இவர் ‘7ஸ்டார் இது புன்னகை நகர் அணி’ படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாகவுள்ளார். கிராமத்திலிருந்து பெருநகரத்துக்கு கால்பந்து விளையாட வரும் ஒரு அணியினர் சந்திக்கும் இன்னல்களைப் பற்றி எடுத்துக்கூறும் படமாக இது உருவாகிறது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *