தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு ரூ.26 கோடி செலவில் புதிய கட்டடம் ஒன்று கட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக கிரிக்கெட் போட்டியில் பங்கெடுக்கவும், நாடகத்தில் நடிப்பதற்கும் நடிகர் ரஜினிகாந்த் சம்மதம் தெரிவித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 62வது பொதுக்குழுக் கூட்டம் சென்னை லயோலா கல்லூரியில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில், நடிகர் சங்கப் புதிய கட்டடம் குறித்து விஷால் பேசியபோது, ‘‘நடிகர் சங்கக் கட்டடத்துக்கான தொகை திரட்டும் பணிக்கு கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கவும், நாடகத்தில் நடிக்கவும் ரஜினி சம்மதித்திருக்கிறார். அப்படி, கட்டப்படவிருக்கும் நடிகர் சங்கம் மூலமாக ஆண்டுக்கு ரூபாய். 6 கோடி வருமானம் ஈட்டுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது’’ என்று கூறினார்.
�,