|நடிகர் சங்கத் தேர்தல்: வேட்பு மனு நிராகரிப்பு?

Published On:

| By Balaji

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு ஜூன் 23ஆம் தேதியன்று அடையாறில் உள்ள ஜானகி எம்.ஜி.ஆர் கல்லூரியில் தேர்தல் நடைபெறவுள்ளது. நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி இந்த முறையும் போட்டியிடுகிறது. சங்கத் தலைவர் பதவிக்கு நாசரும், செயலாளர் பதவிக்கு விஷாலும், பொருளாளர் பதவிக்கு கார்த்தியும் போட்டியிடுகின்றனர். இவர்களை எதிர்த்து நடிகர் பாக்கியராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணி போட்டியிடுகிறது. வேட்பு மனுத் தாக்கல் நேற்றுடன் (ஜூன் 10) முடிவடைந்தது.

நடிகர் சங்கத்தின் 29 பொறுப்புகளுக்காக மொத்தம் 90 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இம்மனுக்கள் அனைத்தும் இன்று (ஜூன் 11) பரிசீலிக்கப்பட்டன. அப்போது விமல், ரமேஷ் கண்ணா, ஆர்த்தி ஆகியோரின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இவர்கள் மூவரும் சந்தா தொகையை சரியாக செலுத்தாத காரணத்தால் இவர்களது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இவர்கள் மூவரும் பாக்கியராஜ் அணி சார்பாக செயற்குழு உறுப்பினர் பொறுப்புக்கு போட்டியிட மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடுபவர் குறைந்தது ஏழு ஆண்டுகளாவது உறுப்பினராக இருந்திருக்க வேண்டும். கடந்த டிசம்பர் மாதம் வருடாந்தர சந்தா செலுத்தியிருக்க வேண்டும். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரமேஷ் கண்ணா, “நான் நடிகர் சங்கத்தில் 48 ஆண்டுகளாக உறுப்பினராக இருக்கிறேன். எனது வேட்புமனு தள்ளுபடி செய்யப்படவில்லை. அப்படி வெளியான தகவல் வெறும் வதந்தி. என்னுடைய மனுவை தள்ளுபடி செய்யவே முடியாது. இதெல்லாம் பிரச்சினை அல்ல. நிச்சயமாக பாக்கியராஜ் தலைமையிலான அணி வெற்றிபெறும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய நடிகை ஆர்த்தி, “2020ஆம் ஆண்டு வரை சந்தா செலுத்திவிட்டேன். அதற்கான தேதிகளை சரிபார்த்தார்கள். அரசியலில் இதெல்லாம் சாதாரணம்தான்” என்று கூறினார்.

**

மேலும் படிக்க

**

**

[அதிமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்!](https://minnambalam.com/k/2019/06/11/26)

**

**

[டிஜிட்டல் திண்ணை: எம்.எல்.ஏ.க்கள் பலம்: அதிமுகவில் மோதிக்கொள்ளும் மா.செ.க்கள்!](https://minnambalam.com/k/2019/06/10/66)

**

**

[கலெக்டர் ரோகிணியை எகிறிய எடப்பாடி](https://minnambalam.com/k/2019/06/10/46)

**

**

[மோடிக்கு வானம் கொடுத்த பாகிஸ்தான்](https://minnambalam.com/k/2019/06/11/21)

**

**

[செக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!](https://minnambalam.com/k/2019/06/09/36)

**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share