>நடிகராக நடிக்கும் மஹத்

Published On:

| By Balaji

மஹத் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்றுவருகிறது.

அறிமுக இயக்குநர் ராஜேஷ் கண்ணா இயக்கும் இந்தப் படத்தில் மஹத் நடிகர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். “கதையைக் கேட்பதற்கு முன் எனது கதாபாத்திரத்தை கேட்டவுடனே படம் பற்றிய எதிர்பார்ப்பு எனக்கு ஏற்பட்டது. நாம் அன்றாடம் செய்யும் காரியங்களை திரையிலும் செய்யும் போது ஜாலியாகவும் சவாலாகவும் உள்ளது. திரில்லர் படமாக உருவானாலும் நான் சம்பந்தப்பட்ட காட்சிகள் முழுக்க நகைச்சுவையாக அமைந்திருக்கும்” என்று மஹத் படம் குறித்து தெரிவித்துள்ளார்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் மஹத்துடன் இணைந்து நான்கு நாயகிகள் நடிக்கவுள்ளனர். அறிமுக நடிகை பாக்ய ஸ்ரீ இணைந்து நடித்துவரும் நிலையில் முன்னணி கதாநாயகிகள் மூன்று பேரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது.

சாம்.சி.எஸ் இசையமைக்க, கோபி கிருஷ்ணா படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். சூரஜ் நல்லசாமி ஒளிப்பதிவு செய்கிறார். சிறுத்தை கணேஷ் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார்.

**

மேலும் படிக்க

**

**[அவசரப்பட்டுவிட்டேனோ? புலம்பிய தங்கம்](https://minnambalam.com/k/2019/07/13/18)**

**[நிர்வாகிகள் விலகுவதை தடுக்க…சசிகலா போட்ட பட்ஜெட்!](https://minnambalam.com/k/2019/07/13/7)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**

**[ மோடிக்கு தயாநிதியை தூது அனுப்பினாரா ஸ்டாலின்?](https://minnambalam.com/k/2019/07/12/24)**

**[டிஜிட்டல் திண்ணை: ஆட்சியைக் கவிழ்க்க ஸ்டாலின் மீண்டும் முயற்சி!](https://minnambalam.com/k/2019/07/12/87)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share