ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் பெரும்பாலான பெரிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து, தேர்தல் வேலைகளையும் வேகப்படுத்தியுள்ளது. மேலும், ஆளும்கட்சி தலைமையும், எதிர்க்கட்சி தலைமையும் தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக மற்ற கட்சிகளிடம் வெளிப்படையாகவே ஆதரவு கேட்டு வருகின்றன.
இந்நிலையில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், “யாருக்கும் ஆதரவு கொடுக்கும் மனநிலையில் இல்லை. அதனால் தேர்தல் நெருக்கத்தில் யாருக்கும் த.மா.கா. ஆதரவு இல்லை என்று அறிவிக்கலாமா அல்லது இடைத்தேர்தலை புறக்கணிப்பு செய்வதாக அறிவிக்கலாமா’ என்ற ஆலோசனையில் உள்ளதாக சொல்கிறார்கள் த.மா.கா நிர்வாகிகள். அதேநேரத்தில், ‘ஓ.பி.எஸ். அணியினருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும்பட்சத்தில் ஓ.பி.எஸ். அணிக்கு ஆதரவு கொடுக்கலாமா’ என்றும் த.மா.கா. தரப்பில் தீவிர ஆலோசனை நடைபெற்று வருவதாக தெரிகிறது.�,