அக்கா தங்கையாக த்ரிஷா-சிம்ரன் நடிக்கும் புதிய படம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
பேட்ட படத்திற்குப் பின் த்ரிஷா, சிம்ரன் இருவரும் புதிய படமொன்றில் இணைந்து நடிக்கின்றனர். பிளாஷ்பேக்கில் வரும் ரஜினிக்கு த்ரிஷா நாயகியாகவும், வயதான ரஜினிக்கு சிம்ரன் ஜோடியாகவும் நடித்தனர். இப்படம் சிம்ரனுக்கு ‘கம்-பேக்’ படமாக அமைந்தது. 1999ஆம் ஆண்டு சிம்ரன், பிரசாந்த் நடித்த ஜோடி படத்தில் த்ரிஷா துணை நடிகையாக தோன்றியது நினைவிருக்கலாம், அப்படத்திற்குப் பின் பேட்ட படத்தில் 20 வருடங்களுக்குப் பின் இணைந்து நடித்த இருவரும், மூன்றாவது முறையாக இப்படத்தில் இணையவுள்ளனர்.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் அக்கா தங்கையாக இவ்விருவரும் பிரதான பாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். 2014ஆம் ஆண்டு வெளியான ராமானுஜம் படத்தில் நாயகனாக நடித்த அபினவ் இப்படத்தில் சிம்ரனுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.
சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கும் இப்படம் ஒரு அட்வென்சர் த்ரில்லராக உருவாகி வருகிறது. தெலுங்கு நடிகர் ஜகபதி பாபு இப்படத்தில் முக்கிய கதாபாத்திரமொன்றில் நடிக்கவுள்ளார். சதிஷ் நகைச்சுவை கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார். அனைவருக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்ட இப்படத்தின் திரைக்கதை படத்தில் பேசப்படும் என படக்குழு கூறியுள்ளது.
இன்னும் பத்து நாட்களே இப்படத்தின் படப்பிடிப்பு மீதமுள்ளதால் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாகியிருக்கிறது. விரைவில் இப்படம் பற்றிய விரிவான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
**
மேலும் படிக்க
**
**[டிஜிட்டல் திண்ணை: சசிகலா நடத்திய மெகா குடும்ப பஞ்சாயத்து!](https://minnambalam.com/k/2019/07/19/85)**
**[பிக் பாஸ் 3: ஜஸ்ட் லைக் தட் சிறுசுகள்!](https://minnambalam.com/k/2019/07/19/9)**
**[ அடிக்கப் பாய்ந்த சத்யா – அடக்கிய சேகர்பாபு: சட்டமன்ற காட்சிகள்!](https://minnambalam.com/k/2019/07/18/25)**
**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**
**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்! – 2](https://minnambalam.com/k/2019/07/13/54)**
�,”