|த்ரில்லர் கதையில் ரீஎன்ட்ரியாகும் இயக்குநர்!

public

பிரியமுடன், யூத், இரணியன் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய வின்சென்ட் செல்வா தற்போது முழு நீள த்ரில்லர் படம் ஒன்றை இயக்கிவருகிறார்.

அறிமுக நடிகர்களை வைத்து வித்தியாசமான கதைக்களம் அமைத்துள்ள வின்சென்ட் செல்வா தலைப்பிலும் புதுமை காட்டியுள்ளார். ‘பத்து செகண்ட் முத்தம்’ இதுதான் இப்படத்தின் தலைப்பு. எழுத்தாளர் சுஜாதாவின் சிறுகதை ஒன்று இதே தலைப்பில் வெளியாகியுள்ளது. கதையை எடுக்காமல் தலைப்பை மட்டும் சுஜாதாவிடம் இருந்து கடன் வாங்கியுள்ளார் வின்சென்ட் செல்வா.

வன்முறை, வன்முறையையே தோற்றுவிக்கும் என்பதை மையமாக வைத்துத் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. பிரதான பெண் கதாபாத்திரம் குறுகிய காலத்தில் பெரிய புதிர் முடிச்சுகளை அவிழ்ப்பவராக உருவாக்கப்பட்டுள்ளது. படக்குழுவில் தம்பி ராமையா மட்டுமே பிரபலமான நடிகராக உள்ளார். பெங்களூருவைச் சேர்ந்த கீதா பிரதான வேடம் ஏற்று நடித்துள்ளார். கொச்சினைச் சேர்ந்த சரீஷ் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

வாகமன் (கேரளா), ஹைதராபாத், கொடைக்கானல் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிக் கட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. பாடல்கள் இல்லாமல் பின்னணி இசை மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *