|தொழில்நுட்பத்தால் சேது பாலம் கட்டப்பட்டதாம்!

Published On:

| By Balaji

சேது பாலத்தை கட்ட ராமர் நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தினார் என்று பஞ்சாப் ஆளுநர் வி.பி.சிங் பட்னோர் தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

பஞ்சாபில் தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பாக தேசிய தொழில்நுட்ப நாள் கொண்டாடப்பட்டது. அந்த விழாவில் பங்கேற்று உரையாற்றிய ஆளுநர் பட்னோர் கூறுகையில், “தொன்மையான காலங்களிலேயே நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டன. அதற்கு ஆதாரமாக சேது பாலம் உள்ளது. கடலின் குறுக்கே சேது பாலத்தை ராமர் நவீன தொழில் நுட்பங்களை வைத்துக் கட்டினார். அதற்கு அனுமார்ஜி உறுதுணையாக இருந்தார். அனுமார்தான் சஞ்சீவி மலையை லட்சுமணனுக்காக தூக்கிவந்தார்: எனத் தெரிவித்தார்.

பஞ்சாப் மாநில ஆளுநரின் பேச்சு அறிவியலாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மத்தியிலும் கடும் விமர்சனங்களைச் சந்தித்துள்ளது.

இதேபோன்று திரிபுரா முதல்வர் பிலாப் குமார் தேவ் மகாபாரத காலத்திலேயே இணையதளம், சாட்டிலைட் வசதிகள் இருந்தன. அதனால்தான் பார்வையற்ற அரசரான திருராஷ்டிரருக்கு அவரது தேரோட்டியாக இருந்த சஞ்சயால் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் நடந்த குருஷேத்திரப் போர் குறித்த உயிரோட்டமான கமெண்டரியை கொடுக்க முடிந்தது என்று பேசியிருந்தார்.

திரிபுரா முதல்வரின் கருத்து அறிவியலாளர்களாலும் கல்வியாளர்களாலும் அறிவியல் அடிப்படை அற்றது, பிற்போக்கானது மற்றும் தர்க்கமில்லாதது என்று விமர்சிக்கப்பட்டது. அந்த விமர்சனங்கள் அடங்கும் முன்னரே பஞ்சாப் ஆளுநர் இன்னொரு சர்ச்சையை கிளப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share